உச்சகட்ட பயத்தை ஏற்படுத்திய விஜயகாந்தின் உடல்நிலை.. மருத்துவரின் அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

கேப்டன் விஜயகாந்த் சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது முத்திரையை பதித்தவர். ஆனால் சமீபகாலமாக அவரது உடல்நிலை மிகுந்த மோசமாக உள்ளது. இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட தேதிமுக கட்சியினர் போட்டியிடவில்லை. மேலும் ரசிகர்களும் விஜயகாந்தை நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் விஜயகாந்தின் குடும்பத்தினர் சில விழாக்களின்போது விஜயகாந்த் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஓரளவு மனதை தேற்றிக் கொள்கின்றனர்.

ஆனால் தற்போது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி தரும் ஒரு விஷயம் வந்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது விஜயகாந்த் கால்களில் இருந்து மூன்று விரல்கள் அகற்றபட்டதாக கூறப்படுகிறது. விஜயகாந்தின் கால்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவைசிகிச்சை செய்து மூன்று விரல்களும் அகற்றப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜயகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தைக் கேட்ட ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தன்னை தேடி உதவி என்று வந்தவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய கூடியவர் விஜயகாந்த்.

இதனால் வாரி வழங்கும் வள்ளலுக்கா இந்த நிலைமை என ரசிகர்கள் தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -