புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிரதீப் வாயை திறந்தால் மொத்தமும் காலி.. மரண பீதியில் மாயா மறைக்கும் உண்மை

Maya-Pradeep: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது டிஆர்பியில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த வாரம் கேப்டனாக இருந்த மாயா செய்த வில்லத்தனம் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவில் கடும் கண்டனங்களுக்கு ஆளானது. அதில் பிரதீப் விவகாரமும் சேர்ந்து கொண்டதில் அவருடைய கேங் மொத்தமும் கழுவி ஊற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து வார இறுதியில் கூட ஆண்டவர் அவர்களை ரோஸ்ட் செய்தார். இதனால் தற்போது அவர்கள் கொஞ்சம் அடங்கி இருப்பது போல் பாசாங்கு செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுடைய வில்லத்தனம் என்னவோ அப்படியே தான் இருக்கிறது. இந்நிலையில் மாயா ஒரு விஷயத்தால் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்.

அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பூர்ணிமாவிடம் பிக் பாஸ் வீட்டை விட்டு நாம் வெளியில் போனால் நமக்கு பாதுகாப்பு இருக்குமா என்று புலம்புகிறார். மேலும் பிரதீப்புக்கு ஏகப்பட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றனர். ஒரு வேளை அந்த உண்மை மட்டும் வெளி வந்தால் அவ்வளவுதான் என்று பயந்து போய் கூறுகிறார்.

Also read: பிக்பாஸை மிரள விட்ட 8 சர்ச்சை போட்டியாளர்கள்.. ஆண்டவருக்கே தண்ணி காட்டிய பிரதீப்

ஏற்கனவே இந்த ரெட் கார்ட் விவகாரத்தில் மாயா ஏதோ வேலை பார்த்திருப்பதாக ரசிகர்கள் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் பிரதீப் என்னிடம் தவறாக ஒன்றும் நடந்து கொள்ளவில்லை என்று அவர் வாயாலயே உளறி கொட்டினார். தற்போது அவர் இப்படி ஒரு பயத்துடன் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அப்படி என்றால் சட்ட சிக்கலை சந்திக்கும்படியான ஏதோ ஒரு உண்மை சேனல் தரப்பில் இருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. இதில் பிரதீப் மற்றும் மாயா கேங் சம்பந்தப்பட்டிருக்கலாம். அதை அவர்கள் வெளியில் காட்ட முடியாத காரணத்தினால் தான் உரிமை குரல் எழுப்பி பிரதீப்பை வெளியேற்றி இருக்கின்றனர்.

ஆனால் நிச்சயம் இந்த விவகாரத்தில் மாயா மீதுதான் தவறு இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனாலயே பிரதீப் இரண்டு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ட்வீட் போட்டிருந்தார். அதில் ரவீனா ஒரு துரோகி என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. அந்த இரண்டாவது ஆள் நிச்சயம் மாயா தான் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. ஆக மொத்தம் பிரதீப் வாயை திறந்தால் மொத்தமும் காலியாகி விடும்.

Also read: இந்த ஆயா கிட்ட இருந்து ஆம்பளைங்க சூதானமா இருங்க.. மாயாவை கிழித்து தோரணம் கட்டிய பிரபலம்

- Advertisement -

Trending News