குதிரை மேட்சதற்கு ஒன்றரை லட்சம் சம்பளமா.? மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு வெற்றி படமாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டையும் பெற்று பல விருதுகளையும் தட்டி சென்றார். பிறகு இவர் அடுத்து தனுஷ் நடிப்பில் இயக்கிய படம் தான் கர்ணன். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வெற்றி படமானது. அத்துடன் இந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் இந்த படத்தில் இவர் மனிதாபிமானத்தோடு நடந்து இருக்கிறார். அதாவது கர்ணன் படத்தில் குதிரை மேய்க்கும் ஒரு சிறுவன் படம் முழுக்க வருவான். அவன் கடைசி கிளைமாக்ஸ் இல் செய்யும் அந்த செயல் படத்தைப் பார்த்த அனைவரையும் ஈர்த்தது. அந்தப் சிறுவன் பெயர் தான் காளி. அவன் அந்தப் படத்திற்காக மூன்று மாதம் வேலை செய்திருக்கிறான்.

Also read: பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நடிகர் சிவகுமார் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?

அதற்காக இயக்குனர் அவனுக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் கொடுத்து இருக்கிறார். இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது ஏனென்றால் எந்த ஒரு இயக்குனரும் இந்த மாதிரி கதாபாத்திரத்திற்கு வெறும் 5ஆயிரம் அல்லது 10ஆயிரம் தான் கொடுப்பார்களாம். ஆனால் மாரி செல்வராஜ், மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த செயலை செய்து இருக்கிறார்.

அத்துடன் இவருடைய கேரக்டர் பொதுவாகவே அனைவரையும் உண்மையாகவே மதிக்கக் கூடியவர். யாரிடமும் ஏற்றத்தாழ்வு என்று பார்க்காமல் இந்த செயலை செய்தது, தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய மரியாதையை தேடி கொடுத்திருக்கிறது. மேலும் இவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக தயாரிப்பாளரும் எந்த கேள்வியும் கேட்காமல் சம்பளத்தை கொடுத்தது முக்கியமாக பாராட்டப்பட வேண்டியது.

Also read: ஹிந்தி, தெலுங்கு மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் தனுஷ்.. சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய வியாபாரம்

இந்த இயக்குனர் கேரக்டர் இப்படி இருக்க போய் தான் இவர் மனசுக்கு ஏற்ற மாதிரி இவர் இயக்கிய படங்களும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இதனை அடுத்து மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி வருகிறார். மேலும் மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்து வருகிறார். அவருக்கு இந்த கதை ரொம்பவும் பிடித்துப் போக அவரும் இதில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடித்து வருகிறார்கள். அத்துடன் இப்படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாகவும் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ஊத்தி மூட இருந்த ரெட் ஜெயண்ட்.. கடைசி நேரத்தில் உதயநிதிக்கு கண்ணை திறந்து விட்ட புண்ணியவான்

Next Story

- Advertisement -