கடங்காரனாக மாறிய புஷ்பா புருஷன்.. பாக்யாவை பகைத்ததால் பல பேர் ஹாஸ்பிடலில் அட்மிட்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மொத்த சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், 20 லட்சத்தை ஒரு மாதத்தில் கொடுத்தால் மட்டுமே வீட்டில் பாக்யாவை தங்க விடுவேன் என்று கோபி சொல்லி இருக்கிறார். இதனால் இரவும் பகலுமாக ஒரு வாரம் திருமண மண்டபத்தில் இருக்கும் சமையல் ஆர்டரை வெறித்தனமாக செய்த பாக்யா அதன் மூலம் 2 லட்சத்தை பெற்றிருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க ராதிகாவை அவருடைய அலுவலகத்தின் உயர் அதிகாரி திட்டி தீர்க்கிறார். ஏனென்றால் அந்த அலுவலகத்தின் கேட்டரிங் ஆர்டரை பாக்யா பெறுவதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டால் கடைசியில் ராதிகா இடையில் புகுந்து அதைக் கெடுத்து விட்டார். பிறகு வேறு ஒருவருக்கு அந்த கேட்ரிங் ஆர்டர் சென்றது.

Also Read: கொஞ்ச, நெஞ்ச பேச்சாடா பேசுன.. டைட்டில் வின்னராக இருந்தும் வாய்ப்புக்காக அலையும் பிக்பாஸ் பிரபலம்

இப்போது ஆபீஸில் கொடுக்கப்படும் உணவு தரமாக இல்லாததால் பல பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி உள்ளனர். இதற்கெல்லாம் ராதிகா தான் காரணம். ஏனென்றால் பாக்யா அந்த கேட்டரிங் ஆர்டரை எடுத்திருந்தால் தரமான உணவை அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு கொடுத்திருப்பார் என்ற எண்ணம் அந்த உயர் அதிகாரிக்கு ஏற்பட்டுவிட்டது.

அதுமட்டுமல்ல அந்த கேப்டன் ஆர்டர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாக்யா பல லட்சத்தை பேங்கில் இருந்து லோனாக பெற்றார். அதையெல்லாம் பாழாக்கும் வகையில் அந்த ஆர்டரை பாக்யாவிற்கு கிடைக்க விடாமல் ராதிகா செய்து விட்டார். ஆனால் ராதிகாவின் கெட்ட எண்ணத்தால் இப்போது ஆபீஸில் அவருக்கு இருந்த நல்ல பெயர் சுக்கு நூறாக உடைந்து விட்டது.

Also Read: நாங்களே அன்றாடம் காட்சி இவ்வளவு பைன் போட்டா எப்படி சார்.? பாசத்தை தொலைத்து கதறும் ரோபோ சங்கர்

அதேபோல் ஆடம்பர வாழ்க்கையை வாழும் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி, குடும்ப செலவிற்காக தன்னுடைய நண்பரிடம் 2 லட்சத்தை கடனாக கேட்கிறார். அந்த சமயம் பார்த்து ஜெனி கோபிக்கு தொலைபேசியின் மூலம் அழைத்து, வீட்டிற்கு வரும்படி சொல்கிறார். பிறகு பாக்யா கோபியிடம் கேட்டரிங் ஆர்டர் மூலம் கிடைத்த 2 லட்ச செக்கை கொடுத்து, இன்னும் மீதம் இருக்கும் 18 லட்சத்தை ஒரு மாதத்திற்குள் கொடுத்து விடுவேன் என்று மாஸ் காட்டுகிறார்.

அப்போது வீட்டில் இருப்பவர்கள் பலருக்கும் பாக்யாவின் இந்த செயல் புல்லரிக்க வைத்தது. பாக்யா எப்படியாவது பணத்தையும் கொடுத்து வீட்டை எழுதி வாங்க தான் போகிறார். ஆனால் 50 வயதில் தன்னுடைய சந்தோசம் தான் முக்கியம் என்று 2-வது திருமணம் செய்து கொண்ட புஷ்பா புருஷன், கொஞ்சம் கொஞ்சமாக கடனாளியாக மாறிக் கொண்டிருக்கிறார். ‘இதெல்லாம் உனக்கு தேவைதான்’ என்று கோபியை சின்னத்திரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Also Read: இப்போதைக்கு கல்யாணம் இல்ல.. அமீர்-பாவனி லிவிங் டுகெதர் சீக்ரெட் இதுதான்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை