வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மொத்த பழியையும் முத்து மீது போட்ட மனோஜ்.. மீனாவின் தங்கை கல்யாணத்தில் ரோகிணியால் ஏற்படும் குளறுபடி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தங்கையை பொண்ணு பார்க்க வருகிறார்கள் என்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் இதைப் பற்றி முத்துவிடம் கேட்கலாம் என்று மீனா, கார் செட்டுக்கு போய்விட்டார். அங்கே போய் முத்துவிடம் சீதாவை கோவிலில் பார்த்த ஒருவர் பொண்ணு பார்க்க வருகிறார்கள். குடும்பம் மற்றும் பையன் நல்ல கேரக்டர் என்று சொல்லி முத்துவிடம் கருத்து கேட்கிறார்.

அதற்கு முத்து, இப்பதான் சீதா வேலைக்கு போய் இருக்கிறாள். இன்னும் கொஞ்ச நாள் போய்விட்டால் குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள் குறையும். இப்பமே ஏன் கல்யாணம் பண்ணி கொடுக்கணும் என்று கேட்கிறார். அதற்கு மீனா, மாப்பிள்ளை குடும்பம் நல்ல கேரக்டரில் வசதியாகவும் இருப்பதால் அம்மா பார்க்கலாம் என்று சொல்கிறார்கள் என முத்துவிடம் சொல்கிறார்.

அதன்படி நாம் இருவரும் வீட்டுக்கு போயிட்டு வரலாம் என்று முத்துவை கூட்டிட்டு மீனா கிளம்பி விடுகிறார். பிறகு இருவரும் வீட்டிற்கு போன நிலையில் அங்கே மனோஜ் கோபமாக வருகிறார். வந்ததும் ஷோரூம் இல் பாடி பில்டர் ஆட்கள் வந்து 50 ஆயிரத்துக்கு பொருட்களை எடுத்து போனதற்கு காரணம் முத்து தான் என்று அனைத்து பழியையும் முத்து மீது போடுகிறார்.

அந்த பாடி பில்டரை முத்து அடித்ததினால் தான் அவனுடைய மருத்துவ செலவுக்காக என்னிடம் வந்து பணம் கேட்டார்கள். நான் பணம் கொடுக்க மறுத்தவுடன் கடையில் இருந்த பொருட்களை எடுத்துட்டு போய் விட்டார்கள். இதற்கு எல்லாம் நீ தான் காரணம் என்று முத்துமீது பழி சுமத்துகிறார் மனோஜ். அது மட்டுமில்லாமல் நான் இந்த மாசம் தரக்கூடிய ஐம்பதாயிரம் ரூபாய் கடனை திருப்பி தர மாட்டேன் என்று மனோஜ் பிடிவாதமாக சொல்கிறார்.

இது கேட்ட அண்ணாமலை ஒரு தொழில் பண்ற உனக்கு சாமர்த்தியம் இருக்க வேண்டும். அவங்க கேட்ட உடனே உன்னை யார் தூக்கி கொடுக்க சொன்னா? ஒரு தைரியத்துடன் அவங்க கூட போராட முடியாதா என்று அண்ணாமலை கேட்கிறார். அப்பொழுது முத்து, அவர்கள் கடையில் வந்து பிரச்சினை பண்ணும் பொழுது நீ எனக்கு போன் பண்ணி சொல்லி இருந்தாய் என்றால் நான் அவங்களை காலி பண்ணி இருப்பேன் என்று சொல்கிறார்.

அதற்கு மனோஜ், நான் உன்ன மாதிரி ரவுடித்தனம் பண்ணக்கூடிய ஆளு கிடையாது. நான் ரொம்பவே டீசண்டான ஆளு என்று சொல்லி இந்த மாசம் பணம் தர முடியாது என்று சொல்கிறார். உடனே ரோகினி நான் அந்த நேரத்தில் கடையில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று சொல்கிறார். இதை வைத்து முத்து நக்கல் அடித்து பேசியதால் ரோகிணி இந்த மாசம் செலவையும் சேர்த்து அடுத்த மாசம் ஒரு லட்ச ரூபாய் தருகிறோம் என்று சொல்லிவிடுகிறார்.

இதனை அடுத்து முத்துவை கூட்டிட்டு மீனா அவருடைய அம்மா வீட்டுக்கு போகிறார். அதற்கு முன் சீதா அவங்க அம்மாவிடம் எனக்கு ஏன் இப்பவே கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நினைக்கிறாய்? நம்மகிட்ட அந்த அளவுக்கு பணம் இருக்கிறதா? இப்பொழுது தான் நான் வேலைக்கு போய் கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்து வருகிறேன். அதற்குள் இந்த ஒரு கல்யாணம் தேவையா என்று சண்டை போடுகிறார்.

பிறகு மீனா வந்து சீதாவை சமாதானப்படுத்தி முதலில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து அவங்க பார்த்துட்டு போகட்டும். மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று சீதாவை ரெடி பண்ணுகிறார். அதன்படி மாப்பிள்ளை வீட்டில் இருந்து அம்மா அப்பா வந்து சீதாவை பார்த்து பொண்ணு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள். மாப்பிள்ளைக்கு வேற வேலை இருப்பதால் வர முடியவில்லை என்று போனில் அவருடைய போட்டோவை காமிக்கிறார். போட்டோவை பார்த்ததும் அனைவருக்கும் பிடித்து விட்டது.

இதனை தொடர்ந்து சீதாவின் கல்யாண வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற போகிறது. ஆனால் இந்த நேரத்தில் குளறுபடியை பண்ண வேண்டும் என்பதற்காக ரோகிணி, முத்து போனில் இருக்கும் வீடியோவை எடுத்து வெளியிடலாம் என்று பிளான் பண்ண போகிறார். ஆனால் அதற்குள் முத்து அந்த வீடியோவை டெலிட் பண்ணி விட்டால் எந்த பிரச்சனையும் வராமல் சீதாவின் கல்யாணமும் நடைபெற்று விடும்.

இல்லையென்றால் ரோகிணி அந்த வீடியோவை வைத்து சீதாவின் கல்யாணத்தில் மட்டுமல்லாமல் முத்து மற்றும் மீனாவின் சந்தோஷத்தில் இடைஞ்சல் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி மாட்டவில்லை என்று இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுத்துக் கொண்டு வருகிறார்கள்.

அதனால் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கூட முதல் ஆறு இடத்தை பிடிக்க முடியாமல் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் ரோகிணி முத்துவிடம் மாட்டினால் நாடகம் சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கும்.

- Advertisement -

Trending News