பட்டதற்கு பின் புத்தி தெளிந்த மனோபாலா.. இனி இதை மாதிரி யாரும் செய்யாதீங்க என கடைசியா கொடுத்து அட்வைஸ்

பொதுவாக எல்லாரும் சொல்வதுதான் ஒருவர் உயிரோடு இருக்கும் போது அவர்களுடைய அருமை நமக்குத் தெரியாது அவர் இல்லாத போது தான் அதன் அருமை புரியும் என்று சொல்வார்கள். அது என்னமோ உண்மைதான் தற்போது அதை நம் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். சினிமாவில் பிரபலங்களாக இருந்த விவேக், மயில்சாமி, மனோ பாலா இவர்களின் இறப்பிற்கு பிறகு இவர்களை கொண்டாடாதவர்கள் யாரும் இல்லை. இவர்களைப் பற்றி பெருமையாக பேசாதவர்களும் யாரும் இல்லை.

இதனைத் தொடர்ந்து இவர்கள் செய்த நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக வீடியோ மூலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் இரு தினங்களுக்கு முன்பு இறந்து போன மனோபாலாவை பற்றி நிறைய நல்ல செய்திகள் மற்றும் அவர் பேசிய வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இந்த மாதிரியான வீடியோக்களை பார்த்த பிறகு தான் நல்ல மனிதர்களை இழந்து விட்டோம் என்று மிகவும் வருத்தத்தில் பேசி வருகிறோம்.

Also read: விஜய், மனோபாலா காம்போவில் குறும்புத்தனமான 5 ஹிட் படங்கள்.. மன்சூர் அலிகான் உடன் செம ரகளை

அதில் இவர் பேசிய ஒரு வீடியோ மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பரவி வருகிறது. அது என்னவென்றால் தன்னுடைய உடம்பு இப்படி ஆனதற்கு காரணமே என்னுடைய சிகரெட் பழக்கத்தினால் தான். நான் இயக்குனராக பெரிய உச்சத்தில் இருந்தபோது ஒரு நாளைக்கு 200 சிகரெட் குடிப்பேன். இதைப் பார்த்து பலரும் என்னை கண்டித்து இருக்கிறார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் நான் அவர்கள் சொல்வதை கண்டுக்கவே மாட்டேன் என் இஷ்டப்படி தான் இருந்திருக்கிறேன்.

பிறகு ஒரு கட்டத்தில் நான் கொஞ்சம் மோசமான நிலைமைக்கு ஆளான பிறகு இந்தி பட நடிகை ரேகா, நான் குடிக்கும் சிகரெட் சாம்பலை ஒரு பாக்கெட்டில் போட்டு அதை கட்டி தொங்கவிட்டு நீ எவ்வளவு குடிக்கிறாய் என்று இதை வைத்தே புரிந்து கொள். இதுக்கு மேலேயும் நீ தொடர்ந்து இதே மாதிரி செய்தால் உன்னுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நீயே யோசித்துப் பார் என்று எனக்கு அறிவுரை கூறினார்.

Also read: மனோபாலா மரணத்தில் சர்ச்சையை கிளப்பிய பயில்வான்.. அதிர்ச்சியில் உறைய வைத்த பழக்கம்

அத்துடன் என் உடம்பும் இவ்வளவு ஒல்லியானதற்கு காரணம் அந்த சிகரெட் தான். பிறகு என்னுடைய உடம்பை பார்த்து எனக்கே மிக வேதனையை கொடுத்தது. அந்த அளவுக்கு எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டேன். அதனால் ஒரு கட்டத்தில் நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனாலும் நிறுத்திய பிறகு அதனுடைய வலியால் பிரச்சனை ஏற்பட்டதால் மிகவும் கஷ்டத்தை சந்தித்திருக்கிறேன்.

என்னால சரியாக மூச்சை கூட விட முடியாமல் தவித்தேன். அதன் பிறகு எல்லாருக்கும் அட்வைஸ் கொடுக்கிறேன் யாரும் சிகரெட்டை தயவு செய்து குடிக்காதீர்கள் என்று. எல்லாரும் சொல்லுவாங்களே பட்டதற்கு பின் புத்தி தெளியும் என்று அது என்னுடைய விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு நான் அவதிப்பட்டு இருக்கிறேன். என்று இவர் பேசிய வீடியோ இவர் இறந்த பின்பு வைரலாகி வருகிறது. இதை பார்த்து இனிமேலாவது சிகரெட் குடிப்பவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நல்லது.

Also read: மனோபாலாவுக்காக கடைசி ஆசையை நிறைவேற்றிய லியோ.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த விஜய்யின் புகைப்படம்

Next Story

- Advertisement -