சினிமாவை தலைகீழாகப் புரட்டிப் போட்ட மணிவண்ணன்.. முதல் படத்திலேயே கிடைத்த வெற்றி

அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர் இயக்குனர் மணிவண்ணன். சொல்லப்போனால் அந்த படத்தின் கதையே மணிவண்ணனின் கதைதான் என்ற ஒரு பேச்சும் அப்போது நிலவியது உண்டு.

அதன் பிறகு அவர் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். பொதுவாகவே தமிழ் சினிமாவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. என்னவென்றால் இயக்குநர்கள் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் பெண்கள் தன் கணவனை யாருக்கும் விட்டுத்தர மாட்டார்கள்.

இப்படிப்பட்ட கதை தான் அந்த காலகட்டத்தில் அதிகமாக வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் மணிவண்ணன் அந்த வரலாற்றையே மாற்றியமைத்து முதல் படத்திலேயே வித்தியாசத்தை காட்டி இயக்கியிருந்தார். இத்தனை பெருமை கொண்ட அவருடைய முதல் திரைப்படம் கோபுரங்கள் சாய்வதில்லை.

மோகன், சுகாசினி, ராதா, எஸ் வி சேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அழகு இல்லாத கிராமத்து பெண்ணான அருக்காணி கேரக்டரில் சுகாசினி நடித்திருப்பார். அவரை விருப்பமில்லாமல் திருமணம் செய்யும் மோகன் பின் அவருக்கு பிடித்த ராதாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்.

இவர்கள் இருவரையும் மோகன் ஒரே வீட்டில் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறுவார். பின்னாளில் இந்த உண்மை தெரியவரும் இரண்டு மனைவிகளும் தன் கணவனை விட்டுக் கொடுக்க முடிவு செய்வதுதான் கதை. இப்படி ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இந்தத் திரைப்படம் பலரின் கவனத்தையும் பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும், சுஹாசினியின் நடிப்பும் அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதுவரை தமிழ் சினிமா கண்டிராத வித்யாசமான படைப்பைக் கொடுத்த இயக்குனர் மணிவண்ணனுக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தது. இப்படி ஒரு வரலாற்றையே மாற்றி அமைத்த மணிவண்ணன் ஒரு இயக்குனராக இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -