உச்சகட்ட டென்சனில் மணிரத்தினம்.. தக் லைப் படத்தின் தூண் போல் உள்ள நடிகருக்கு ஏற்பட்ட விபரீதம்

வரையறுக்கப்பட்ட நாட்களை விட இழுத்துக் கொண்டே போகிறது மணிரத்தினத்தின் தக் லைப் பட சூட்டிங். கிட்டத்தட்ட படம் 80 சதவீதம் முடிந்து விட்டது. பாண்டிச்சேரி, கேரளா என எல்லா பக்கமும் வளைத்து வளைத்து எடுத்த மணிரத்தினத்திற்கு இப்பொழுது பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.

கடைசி கட்ட படப்பிடிப்பிற்கு லண்டன் செல்கிறது மணிரத்தினம் டீம். ஆனால் இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார் மணிரத்தினம். இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஜோஜூ ஜார்ஜ். இப்பொழுது இவரால் நான் மொத்த சூட்டிங்கும் தள்ளிப் போகிறது.

தூண் போல் உள்ள நடிகருக்கு ஏற்பட்ட விபரீதம்

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் புதுச்சேரி ஏர்போர்ட்டில் நடைபெற்ற சண்டை காட்சியில் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெலிகாப்டர் சீக்வன்ஸ் ஃபைட் எடுக்கும் பொழுது எதிர்பாராத விதமாக இவருக்கு அடிபட்டு சுருண்டு விழுந்தார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூட்டிற்கு கீழ் எலும்பு உடைந்து விட்டது. அதனால் இவர் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை ஓய்வு பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். கொச்சின் மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் பெற்று வருகிறார் ஜார்ஜ். இவரால் இனிமேல் படப்பிடிப்பில் கலந்து கொள்வது கடினம்.

உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் மணிரத்தினம் இதனை எப்படி சரி செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இவர் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் மீதம் இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கமலும் பிசியாக சுற்றி வருகிறார். ஜார்ஜிக்கு அடிபட்டதால் கால் சீட் எல்லாம் வீணா போகிறது.

இதற்கிடையில் பிக் பாஸ் அடுத்த சீசன் தயாராகிக் கொண்டிருக்கிறது அதன் பிரமோ சூட்டிங் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதற்கு கமலஹாசன் கிளம்பி விட்டார். இப்படி தக் லைஃப் படத்திற்கு ஏகப்பட்ட இடையூறுகள் வந்து கொண்டே இருக்கிறது. தலையை தேய்த்துக்கொண்டு உச்சகட்ட பரபரப்பில் மணிரத்னம் சுத்தி வருகிறார்.

Next Story

- Advertisement -