43 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கிய மணிமேகலை.. புகைப்படத்துடன் வெளியிட்ட கணவர்

சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் பலரும் அந்நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு தனது துறுதுறு பேச்சாலும், குறும்புத்தனமானசேட்டைகளாளும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார்.

சன் டிவியில் பணியாற்றி வந்த மணிமேகலை அதன் பிறகு விஜய் டிவியில் குடியேறினார். அங்கு இவருக்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி போட்டியாளராகவும் , தொகுப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அந்த நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் மூலம் பல கோடி ரசிகர்களுக்கு பிடித்து போகும் போட்டியாளராக மாறினார். அதுவும் இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும்.

manimegalai
manimegalai

மணிமேகலை போல் அவரது கணவரும் திரைத் துறையைச் சேர்ந்தவர். இவர் நடன கலைஞராக ஒரு சில படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது இருவரும் இணைந்து பிஎம்டபிள்யூ புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். மேலும் இப்புகைப்படத்தை பதிவிட்டு சொந்த முயற்சியில் விநாயகர் சதுர்த்தி அன்று தனக்கு பிடித்த கார் வாங்கியதாகவும் அதில் பதிவிட்டுள்ளனர். தற்போது இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்