சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

காலம் கடந்து வெற்றிவாகை சூடிய மணிகண்டன்.. வாயடைக்க வைத்த நிகழ்வு

நகைச்சுவையை நிகழ்ச்சி ஆக ஒவ்வொருவரின் தனி திறமையை கொண்டு வரும் முயற்சியில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு இருந்து வருகிறது. மேலும் எண்ணற்ற கலைஞர்கள் இதில் கலந்து கொண்ட பிறகே சினிமாவில் கால் பதித்திருக்கின்றனர்.

அந்த வகையில் கலக்கப்போவது யாரு கண்டஸ்டண்டாக இருந்தவரா இப்பொழுது கெஸ்ட் ஆக மாறிவிட்டார் என்று வியக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார் மணிகண்டன். அப்பொழுதைய காலகட்டத்தில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் தன்னை நிரூபிக்கும் சூழ்நிலையில் இருந்த அவர் தற்போதைய நிலை அவரின் விடாமுயற்சியை உணர்த்துகிறது.

Also Read: Good Night Movie Review – குறட்டையால் படாத பாடுபடும் மோட்டார் மோகன்.. குட் நைட் பட முழு விமர்சனம்

நமக்கு தெரிஞ்ச வரை மணிகண்டன் என்பவர் ஒரு சிறந்த எழுத்தாளர், நடிகர், இயக்குனர் என்பதுதான். இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 2021ல் இவரின் நடிப்பை வெளிகாட்டும் விதமாக அமைந்த படம் தான் ஜெய் பீம். இப்படம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் இவரிடம் இருக்கும் மிமிக்கிரி செய்யும் ஆற்றல் இவரை இத்தகைய நிலைமைக்கு கொண்டு சென்றது என்றே கூறலாம். இவர் 2018ல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு கண்டஸ்டண்டாக கலந்து கொண்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த், ரகுவரனை போல மிமிக்ரி செய்திருப்பார். அது இவருக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தந்தது.

Also Read: காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த குட் நைட்.. இதோ ட்விட்டர் விமர்சனம்

மேலும் சினிமாவில் வாய்ப்பு தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்தகைய வளர்ச்சியை பார்க்கையில் இவரின் அர்ப்பணிப்பு தெரிகிறது. அதனின் பிரதிபலனாக இவர் ஆரம்பித்த இடத்திற்கே இவர் மறுபடியும் விருந்தினராக வரச் செய்தது.

இவ்வாறு தன்னை இவர் புதுப்பித்துக் கொண்டார் என்பதே குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் காலம் கடந்த வெற்றியை கூறும் இத்தகைய சம்பவம் காண்போரை வாயடைக்க செய்தது. இது ஒரு புறம் இருக்க தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் கஸ்டடி திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Also Read: மணிகண்டனை தொடர்ந்து வெளியேறும் அடுத்த போட்டியாளர்.. டிக்கெட் to பினாலேவால் விறுவிறுப்பான பிக்பாஸ்

 

- Advertisement -

Trending News