14 வருடத்திற்கு முன்பே விஜய், சூர்யாவிற்கு மணிரத்னம் கொடுத்த ஆஃபர்.. தட்டிக் கழித்து வருந்தும் 10 பிரபலங்கள்

இன்று பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிரபலங்கள் அனைவரின் மார்க்கெட் இந்த படத்திற்கு பிறகு டாப் கீரில் எகிறுகிறது. அந்த அளவிற்கு மணிரத்னம் இந்த படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார்.

இருப்பினும் 14 வருடத்திற்கு முன்பே இந்த படத்தை எடுக்க நினைத்த மணிரத்னம் முதலில் விஜய் மற்றும் சூர்யா இருவருக்கும் தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான ஆஃபரை கொடுத்திருக்கிறார். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். அவர்கள் மட்டுமல்ல மொத்தம் 10 பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தட்டி கழித்துள்ளனர்.

Also Read: வம்சத்தை கருவறுக்க காத்திருந்த நந்தினி.. நேருக்கு நேர் சந்தித்த ஆதித்த கரிகாலன், மிரட்டிவிட்ட பொன்னியின் செல்வன் 2

கடந்த 2009 ஆம் ஆண்டு மணிரத்னம் இந்த படத்தை எடுக்க திட்டமிட்ட போது விஜய், வந்தியத்தேவனாக நடிக்க கமிட்டானார். ஆனால் படம் எடுக்க கால தாமதமானதால் விஜய் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடிக்க சென்று விட்டார். மேலும் 2009ம் ஆண்டில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்க முயற்சித்த போது சூர்யாவும் அதில் கமிட்டாகி இருந்தார்.

மேலும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை மணிரத்னம் அருள் மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அது நடக்காமல் போனது. மேலும் நயன்தாரா, பூங்குழலி அல்லது குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மணிரத்தினம் பரிந்துரைத்தார். மேலும் நடிகை அமலாப் பாலை பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மணிரத்தினம் திட்டமிட்டு இருந்தார்.

Also Read: களை கட்டும் சோழர்களின் வரலாறு.. பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

மேலும் குந்தவையாக நடிக்க கீர்த்தி சுரேஷை முதலில் மணிரத்னம் கமிட் செய்தார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட வாய்ப்பு வந்ததால், கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகினார். அனுஷ்கா, நந்தினி மற்றும் ஊமை ராணி போன்ற இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிக்க பரிந்துரைக்கப்பட்டார். மேலும் நடிகர் ஆர்யாவும் பொன்னியின் செல்வன் பட வாய்ப்பு கிடைத்தும் அதை கை நழுவ விட்டார்.

சிம்புக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணமாக அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். இவர்கள் மட்டுமல்ல விஜய் சேதுபதிக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அது கைநழுவி சென்றது. இவ்வாறு இந்த 10 பிரபலங்கள் தான் பொன்னியின் செல்வன் படத்தின் வாய்ப்பை தவறவிட்டவர்கள்.

Also Read: மார்க் ஆண்டனி டீசர் எல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம்.. விஷால் விஜய்யுடன் திடீரென்று ஒட்டிக்கொண்ட காரணம் இதுதான்

Next Story

- Advertisement -