Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி பட வாய்ப்பை தவறவிட்ட ஹாண்ட்சம் ஆக்டர்.. தளபதி படத்தில் மணிரத்தினம் முதலில் செலக்ட் செய்த கலெக்டர்

தளபதி படத்தில் கலெக்டராக மணிரத்தினம் முதலில் யாரை தேர்வு செய்தார் என்பது தெரியவந்துள்ளது.

aravindth-samy-mani-rathnam

Director Maniratnam Movie Actor: தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் மணிரத்தினம். இவர் தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வெற்றி கண்டார். இவர் எந்த ஒரு படத்தை இயக்கினாலும் அந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு உரிய நடிகர்களை கணக்கச்சிதமாக தேர்வு செய்வார்.

மணிரத்தினம் இயக்கத்தில், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மோலிவுட் சூப்பர் ஸ்டார் மம்முட்டி இருவரும் இணைந்து கலக்கிய படம் தான் தளபதி. இந்த படத்தில் தான் அரவிந்த்சாமி அறிமுகம் ஆனார். தளபதி படத்தில் அவருக்கு கலெக்டர் கதாபாத்திரம் கொடுத்திருப்பார் மணிரத்தினம்.

Also Read: ஜெயிலரின் வெற்றியைப் பொறுத்து தூசி தட்டப்படும் அடுத்த படம்.. நெல்சன் போட்ட கணக்கு ஜெயிக்குமா?

அவரை விட வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமே இல்லை என்பது போல் அசத்தியிருப்பார் அரவிந்த்சாமி. இந்த படத்திற்கு பிறகு தான் அடுத்தடுத்து மணிரத்தினத்தின் ரோஜா, பம்பாய் போன்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை அரவிந்த்சாமி பெற்றார்.

அந்த சமயத்தில் அவ்வளவு ஹேண்ட்சம் ஆக அரவிந்த்சாமி இருப்பார். ஆனால் இவரை விட அழகான ஒரு புது முகத்தை தான் மணிரத்தினம் முதலில் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்தான் ராஜூ மேனன். இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அண்ணன். இவரும் பார்ப்பதற்கு அரவிந்த்சாமி போல அழகாக இருப்பார்.

Also Read: எங்க சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டியே நெல்சா.. ஜெயிலர் வீடியோவை பார்த்துட்டு கொத்து பரோட்டா போட்ட பயில்வான்

இவர் விடுதலை படத்தில் தலைமைச் செயலாளராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர். இவர் என்னதான் தளபதி பட வாய்ப்பு தவறவிட்டாலும் மணிரத்தினத்தின் பம்பாய், குரு, கடல் போன்ற படங்களில் அவருடன் பணியாற்றினார்.

அதுமட்டுமல்ல இவர் மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கியிருக்கிறார். ஒருவேளை இவருக்கு தளபதி படத்தில் அந்த கலெக்டர் கதாபாத்திரம் மட்டும் கிடைத்திருந்தால் அடுத்தடுத்து ஹீரோவாக ரவுண்ட் கட்டி இருப்பார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அண்ணன் ராஜூ மேனன்

actor-raju-menan

actor-raju-menan

Also Read: நடிச்ச அஞ்சு படமும் அட்டர் பிளாப்.. மணிரத்தினம் கைகொடுத்தும் கரை சேர முடியாத நடிகை

Continue Reading
To Top