வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மணிரத்தினத்தின் 4 செல்லப்பிள்ளைகள்.. 75% படத்தில் வந்து செல்லும் ஒரே கதாபாத்திரம்

மணிரத்தினம் படம் என்றாலே எதிர்பார்ப்பிற்கு பஞ்சம் இல்லை. அந்த அளவிற்கு இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு நுணுக்கங்களை கொண்டு படத்தின் கதையை வெளிக்காட்டி இருப்பார். இவரின் படங்கள் புரியாத புதிராகவும், படம் முழுக்க சஸ்பென்ஸை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கும்.

மேலும் இவரின் படங்களில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. தன் கதைக்கு ஏற்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் வல்லமையைக் கொண்டவர். இவரின் 4 செல்லப் பிள்ளைகள் யார் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

Also Read: மணிரத்னத்தின் அடிமடியில் கைவைத்த விஜய் ஆண்டனி.. சம்பவம் செய்த பிச்சைக்காரன்-2

மாதவன்: ஆரம்ப கால கட்டத்தில் நான் எதிர் கொண்ட பிரச்சினைகளை மீறி என்னை ஒரு தன்னம்பிக்கை கொண்டவராக உருவாக்கியவர் தான் மணிரத்தினம் என்று ஒரு இன்டர்வியூவில் கூறி இருக்கிறார் மாதவன். இவரின் படங்களான அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய படங்கள் மணிரத்னம் இயக்கத்தில் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்தது. மேலும் இவற்றில் இடம் பெற்ற மாதவனின் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

அரவிந்த்சாமி: இவர் தன் முதல் படமான தளபதி மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்தினம் ஆவார். இவரின் இயக்கத்தில் நடித்த அரவிந்த்சாமிக்கு முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை அள்ளித் தந்தது. அதன் பின் தொடர்ந்து பல படங்கள் இவர் இயக்கத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஜா, பாம்பே, இந்திரா, கடல், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர் நடித்த 75% படங்கள் மணிரத்தினம் இயக்கத்தில் தான் வெற்றி கண்டது என்பது மிகையாகாது.

Also Read: கமலை போல் மாறத் துடிக்கும் ரஜினி.. விக்ரம் படத்தால் இப்படி ஒரு மாற்றமா?

ஐஸ்வர்யா ராய்: இவர் இயக்குனர் மணிரத்தினம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். மேலும் இதன் நடிப்பில் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் இருவர், ராவணன், குரு, பொன்னின் செல்வன் 1 மற்றும் 2. இப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக பொன்னின் செல்வனின் இடம்பெறும் நந்தினி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஐஸ்வர்யா ராய் நடிக்க வைத்து மாஸ் கட்டி இருப்பார் மணிரத்தினம்.

விக்ரம்: நடிப்பில் பன்முக திறமை கொண்டவர் விக்ரம். மேலும் இவரைக் கொண்டு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட படம் தான் ராவணன். இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இதை தொடர்ந்து பொன்னின் செல்வனின் ஆதித்த கரிகாலனாய் களம் இறக்கி இருப்பார் மணிரத்தினம். இவர்கள் இருவரின் திறமைகளை பாராட்டும் விதமாக இப்படம் அமைந்திருக்கும்.

Also Read: ராஜமௌலியை தூக்கி வைத்து பேசிய மணிரத்னம்.. அவர் இல்லைனா, பொன்னியின் செல்வன் இல்லையாம்

- Advertisement -

Trending News