உதயநிதி, வடிவேலு காம்போவில் வெளியான மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்.. துப்பாக்கி, கத்தியுடன் மிரட்டல்

உதயநிதி அரசியலுக்கு வந்ததால் நான் இனிமேல் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி அவர் கமிட்டான படங்களை நடித்து ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் கடந்த மாதம் வெளிவந்த கண்ணை நம்பாதே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படம் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏனென்றால் இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் இந்த இரண்டு படங்களுமே வித்தியாசமான கதைகளத்துடன் சமூக ரீதியான படங்களாகவும் வெளிவந்தது. இப்போது இவருடைய கூட்டணியில் அரசியலில் இருக்கும் உதயநிதி இணைந்து நடிப்பதால் இப்படம் எந்த மாதிரியான கதையுடன் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Also read: உதயநிதிக்கு சினிமா ஆசையை தூண்டிவிட்ட இயக்குனர் .. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத கடைசி படம்

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாரம்பரிய உடையை அணிந்து கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். அதே நேரத்தில் உதயநிதி கையில் ஒரு கத்தியுடன் நவீன தோற்றத்தில் இருக்கிறார். இதை பார்க்கும் பொழுது வடிவில் கதாபாத்திரம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

அத்துடன் மாரி செல்வராஜுக்கு மாமன்னன் கேரியரில் ஒரு பெரிய படமாக உருவாகும் என்று கூறியிருந்தார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு தேவி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்திற்கான பாடல் வரிகளை யுகபாரதி எழுதி உள்ளார்.

 

Also read: ரெட் ஜெயன்ட் சொத்து மதிப்பு 2000 கோடியா.? ஷாக்காகி பதிலடி கொடுத்த உதயநிதி

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உதயநிதி நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக கருதப்படுகிறது.

ஆனால் இவர் சினிமாவிற்குள் சாதாரணமாக ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடிக்க ஆரம்பித்து அதன் பின் தொடர்ந்து பல வெற்றி படங்களை நடித்து வந்த இவர் தற்போது ஒரு சீரியசான கேரக்டரிலும் நடித்து அதிலும் வெற்றி பெற்று இருக்கிறார். அத்துடன் இந்த படமும் இவர் எதிர்பார்த்தபடி இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

vadivelu-udhayanidhi-first look poster

Also read: வடிவேலுவை வச்சு செய்யும் 5 பெரிய ஹீரோக்கள்.. சுத்தி சுத்தி அடிக்கும் கர்மா!

- Advertisement -