வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பெட்ரூமில் மாட்டிக் கொள்வேன்.. பெருந்தன்மையை காட்டிய மாஸ்டர் மாளவிகா

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால் இவருக்கு ஏராளமான ஃபாலோவர்ஸ் உள்ளனர். மாளவிகா தற்போது மியூசிக் வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இதில் படு கவர்ச்சியான உடை அணிந்து நடித்திருந்தார். இந்த மியூசிக் வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்நிலையில் பிரபலங்கள் ரசிகர்களையும் தங்களுடன் நெருக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும் என அவ்வப்போது தங்களது சமூக வலைதளங்களில் லைவில் வந்து நேரடியாக உரையாடுகின்றனர். அப்போது ரசிகர்கள் தங்களுக்குள்ள சந்தேகத்தை கேட்கின்றனர்.

ஒரு சில இதை பயன்படுத்திக்கொண்டு கேலி, கிண்டலான விஷயங்களையும் கேட்கின்றனர். இந்நிலையில் மாளவிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர் மாளவிகாவுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

அந்த ரசிகர் ஐ லவ் யூ மட்டும் சொல்லுங்க. அதை அப்படியே பிரேம் போட்டு பெட்ரூமில் மாட்டிக் கொள்வேன் என கூறியிருந்தார். ரசிகரின் இந்த வேண்டுகோளுக்கிணங்க மாளவிகா உடனே ஐ லவ் யூ சொல்லியிருந்தார். சில நடிகைகள் இதுபோன்ற என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போய் விடுவார்கள்.

ஆனால் மாளவிகா பெருந்தன்மையாக ரசிகரின் ஆசையை நிறைவேற்றி உள்ளார் என பலரும் கூறிவருகின்றனர். மேலும் தமிழில் மாறன் படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி பக்கம் சென்றுள்ளார். தற்போது மாளவிகா யுத்ரா என்ற ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News