சினிமாவிற்கு முழுக்கு போடும் மலர் டீச்சர்.. துக்கத்திலும் ஒரு சந்தோசமான செய்தி

நடனத்தின் மீது இருந்த தீராத ஆசை காரணமாக, 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடனநிகழ்ச்சியில் அறிமுகமான சாய் பல்லவி தற்போது டாப் நடிகர்களுக்கு ஜோடி போட்டு தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

டாக்டர் படிப்பை முடித்திருக்கும் சாய் பல்லவி திடீரென்று சினிமாவை விட்டு விலகுவதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களை பதற வைத்திருக்கிறது. முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் சாய் பல்லவி பெற்றுள்ளார். இவர் தமிழ்நாட்டிலுள்ள கோத்தகிரியை பூர்வீகமாகக் கொண்டவர்.

Also Read: பணம் பாதாளம் வரை செல்லும்.. விஜய் டிவியின் பித்தலாட்டத்தை வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி

2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சாய் பல்லவி. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்க்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து கமலஹாசன் தயாரிக்கும் மாவீரன் திரைப்படத்தில் மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு சியார்ச்சியா திபிலீசி மாநில மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.

Also Read: ஆஸ்காருக்கு அடி போடும் சாய் பல்லவி.. சமூக வலைத்தளத்தில் வெளிவந்த தகவல்

தற்போது சாய்பல்லவி தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் சொந்தமாகத் மருத்துவமனை கட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சாய்பல்லவி தொடர்ந்து படங்களில் நடிக்க நேரம் இருக்காது. ஏனென்றால் மருத்துவமனை கட்டுவதில் பிசியாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இனிமேல் முழு நேரமும் டாக்டராக மாறப் போகும் சாய் பல்லவி படங்களில் நடிப்பது அரிதுதான்.

இதைக் கேட்டதும் சாய் பல்லவி ரசிகர்களுக்கு தூக்கி வாரி போட்டது. இருப்பினும் மருத்துவ சேவை செய்வதற்காக சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகுவது துக்கத்திலும் ஒரு சந்தோஷம்தான் என்றும் ரசிகர்கள் மனதை தேற்றிக் கொண்டனர்

Also Read: அவ்வளவு நெருக்கமால்லாம் நடிக்க முடியாது.. பிரபல நடிகரை வெறுத்து ஒதுக்கிய சாய் பல்லவி

Next Story

- Advertisement -