அவன் இவன் விஷாலையே தூக்கி சாப்பிட்ட மைனா புருஷன் வீடியோ.. டாக்கரான கெட்டப்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஃபேமஸான பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஒன்றுதான் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3. இந்நிகழ்ச்சி சின்னத்திரை இண்டஸ்ட்ரியில் இருக்கும் கணவன் மனைவிகள் இணைந்து போட்டியிடும் ஒரு நிகழ்ச்சியாகும்.

சில மாதங்களுக்கு முன் தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு தங்கள் திறமைகளை காட்டி வருகின்றனர்.

மேலும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 இல் இந்த வாரம் தீபாவளி செலிப்ரேஷன் வாரம் என்பதால், போட்டியாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் தங்கள் திறமைகளை வித்தியாசமான விதமாக வெளிக்காட்டி உள்ளனர்.

அந்த விதமாக இந்த வார புரோமோவில் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் லேடி கெட்டப்பில் நாட்டுப்புற உடை அணிந்து நச்சுனு ஒரு டான்ஸ் பண்ணி பார்ப்பவர்களை திணறடித்துள்ளார். இவரின் இந்த கலக்கல் டான்ஸை முழுமையாக காண மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

yoki-cinemapettai
yoki-cinemapettai

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தின் ஃபேமஸான சாங் தான் ‘டியா டியா டோல்’ சாங். இதில் நடிகர் விஷால் லேடி கெட்டப் போட்டு தாறுமாறாக நடனத்தை தெறிக்க விட்டிருப்பார்.

அதையே மிஞ்சும் அளவிற்கு நடிகர் யோகேஷ் முக பாவனையிலும் நடனத்திலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். அத்துடன் விஷாலையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு யோகி டாக்கராகம் உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்