நாசுக்காக பேசி ராதிகாவை மடக்கிய கோபி.. ராதிகாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் சில நாட்களாகவே தொடர்ந்து அதிரடியான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி மக்களின் செல்வாக்கைப் பெற்று பலம்வாய்ந்த நெடுந்தொடர் ஆக வலம் வருகிறது. அந்த விதமாக இன்றைய எபிசோடும் எப்பொழுதும் போல் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்றது.

இதையடுத்து கோபி ராதிகாவை பார்க்க அவர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராதிகா அவரிடம் பேசாமல் அவரை அவாய்ட் பண்ணுகிறார். பின் கோபி ராதிகாவிடம் ஏன் என் கூட பேசாம என்ன அவாய்ட் பண்ற என கேட்க, ராதிகா நீங்கள் உங்கள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கீங்க அதனால நான் இனி உங்களிடம் இருந்து சற்று விலகி தான் இருக்கணும் அதுதான் நல்லது என சொல்கிறார் ராதிகா.

உடனே கோபி இல்லை நான் என் மனைவியுடன் சந்தோஷமாக இல்லை. உன் கூட இருக்கிற நேரம் தான் நிம்மதியா இருக்கு என ராதிகாவை கட்டித்தழுவி நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இதையெல்லாம் பார்த்த ராதிகாவின் தாய் இது சரி இல்லை என ராதிகாவை கண்டிக்கிறார்.

மேலும் அவர்தான் வேணும்னா மயூவை நான் என்னுடன் கூட்டிக்கொண்டு சென்றுவிடுவேன் எனவும் ராதிகாவிடம் கூறுகிறார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் ராதிகா.

அதனைத் தொடர்ந்து கோபி செய்வது தவறு என அவர் நண்பர் எடுத்துச் சொல்கிறார். ஆனாலும் கோபி குடும்பத்திற்காக என் சந்தோசத்தை தியாகம் செய்தது போதும் இனி ராதிகா தான் எனக்கு முக்கியம் என்று சொல்லி நண்பரின் வாயை அடைத்து விட்டார்.

எனவே கோபி தன்னுடைய குடும்பத்தை துறந்து ராதிகாவுடன் சேர்ந்து வாழ தயாரானது போல, ராதிகாவும் தன்னுடைய மகளை பிரிந்து கோபியுடன் சேர்ந்து வாழும் முடிவை எடுப்பாரா என்பது கேள்வி குறி தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்