போனது போச்சுன்னு தாஜா பண்ணிய விக்னேஷ் சிவன்.. சோலி மொத்தத்தையும் இழுத்து மூடுன லைக்கா

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருந்த சமயத்தில் திடீரென்று அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து தூக்கப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

அதாவது ஆறு மாதத்திற்கு மேலாக ஏகே 62 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையை முடிக்கும்படி அஜித் விக்னேஷ் சிவனுக்கு கால அவகாசம் கொடுத்து இருக்கிறார். ஆனால் அதை சரியாக செய்யாத விக்னேஷ் சிவன் படப்பிடிப்புக்கு தயாரான அஜித்திடம் வெறும் பாதி கதையை மட்டுமே நீட்டி இருக்கிறார்.

Also Read: ஒண்ணுமே ரெடி பண்ணாமல் கோடிக்கணக்கில் பேசிய பேரம்.. அஜித்தின் வெறுப்பை சம்பாதித்த இயக்குனர்

இதனால் அஜித் விக்னேஷ் சிவன் படம் ட்ராப். சரி போனதுதான் போச்சு அஜித் வேண்டாம் நாம வேறு ஒரு படம் பண்ணலாம் என்று மீண்டும் விக்னேஷ் வைக்காவிடம் ஒரு உருட்டு உருட்டி இருக்கிறார். ஆனால் இதற்கு கொஞ்சம் கூட லைக்கா தயாரிப்பு நிறுவனம் பிடி கொடுக்கவில்லை.

நிறைய படம் வரிசை கட்டி காத்திருக்கிறது. அதனால் இப்போதைக்கு பண்ண வேண்டாம் என்று லைக்கா தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த சுபாஸ்கரன் விக்னேஷ் சிவனிடம் ஒரே போடாய் போட்டுள்ளார். முன்பு ஏகே 62 படம் இல்லாவிட்டாலும் ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று சொல்லப்பட்டது.

Also Read: AK-62, விக்னேஷ் சிவனை ஒதுக்க காரணமாய் இருந்த 5 விஷயங்கள்.. அஜித்தை இப்படி சங்கடப்படுத்தி இருக்காரே!

ஆனால் அஜித்தை கழட்டி விட்டு லைக்காவுடன் மட்டும் கூட்டு சேர விக்னேஷ் சிவன் நினைத்ததால் அது கூட கிடைக்காமல் போனது. இதனால் தற்போது லைக்கா தயாரிப்பில் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதன் பின் ஏகே 63 படத்தை அட்லி தான் இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் விக்னேஷ் சிவன் அஜித்திடம் ஒன்று பேசுவது, தயாரிப்பு நிறுவனத்திடம் மற்றொன்று பேசுவதை தொடர்ச்சியாக செய்திருக்கிறார். இது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இப்படி சினிமாவில் விக்னேஷ் சிவன் தொடர்ந்து பலருடைய வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பது அவருடைய கேரியருக்கு பெரும் ஆபத்தாக முடியப்போகிறது.

Also Read: 90% உறுதியான ஏகே 62.. பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித் படக்குழு

Next Story

- Advertisement -