சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விடாமல் வட்டமிடும் ருசி கண்ட பூனை.. பொன்னியின் செல்வன்-2 மொத்தத்தையும் வாரி தின்னும் லைக்கா!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் அதிக பட்ஜெட்டில் உருவான இந்த படம் வசூலிலும் பல மடங்கு லாபத்தை பார்த்தது.

பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read:கேஜிஎப் தோரணையில் படம் எடுத்தும் நம்பி மோசம் போன லைக்கா.. அதல பாதாளத்தில் தலையை விட்ட பரிதாபம்

படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். படத்தின் மொத்த வசூலையும் வாரி சுருட்ட லைக்கா நிறுவனம் பயங்கரமாக ஒரு திட்டம் போட்டு இருக்கிறது. சமீபத்தில் ரிலீசான நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் மூலம் தான் இந்த திட்டத்தை போட்டு இருக்கிறது லைக்கா.

அதாவது உள்நாட்டு விநியோக உரிமையை தவிர ஒரு படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்யும் பொழுது அதன் விநியோக உரிமையை ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு கொடுத்து விடுவார்கள் தயாரிப்பாளர்கள். இதற்குப் பெயர்தான் ஓவர் சீஸ் விநியோக உரிமை. இதில் தான் இப்போது லைக்கா கை வைத்திருக்கிறது.

Also Read:எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பத்து 2ம் பாகம் படங்கள்.. புதுப்பேட்டை முதல் பொன்னியின் செல்வன் வரை

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஓவர்சீஸ் உரிமையை லைக்கா வேறு எந்த நிறுவனத்திற்கும் கொடுக்கப் போவதில்லை. அந்த நிறுவனமே தான் ஓவர்சீஸ் நாடுகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறது. இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஓவர் சீஸ் வசூல் மட்டுமே 100 கோடி. இதனால் ருசி கண்ட பூனையாக லைக்கா போட்ட திட்டம் தான் இது.

ஓவர்சீஸ் உரிமையை அவர்களே வைத்துக் கொள்வதால் ஒட்டுமொத்த வசூலையும் வாரி விடலாம். எப்படியும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக தான் வசூலை பெறும். ஏற்கனவே நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையில் இவர்கள் அதிக லாபத்தை பெற்றிருக்கிறார்கள். அந்த ஆசைதான் இந்த முடிவுக்கு காரணம்.

Also Read:மறுபிறவி எடுத்து வரும் அருண்மொழி வர்மன், திருப்பி அடிக்கும் சோழ சாம்ராஜ்யம்.. பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

- Advertisement -

Trending News