வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய் பட தோல்வியிலிருந்து மீட்டெடுத்த லவ் டுடே பிரதீப்.. அதிர்ச்சி தகவலை கூறிய தயாரிப்பாளர்

சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை துல்லியமாக சொல்ல முடியவில்லை. காரணம் இணையத்தில் 300 கோடி, 400 கோடி வசூல் செய்ததாக ரசிகர்களை கூறி அடித்துக் கொள்கிறார்கள். குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் எப்படியும் வசூல் செய்துவிடும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு உண்டு.

அந்த வகையில் விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. கடைசியாக இவர்களது நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்கள் 300 கோடியை தாண்டி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : 3வது படத்திலேயே எகிறிய கவின் மார்க்கெட்.. விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய ஹீரோ

ஆனால் இந்தப் படம் வெளியாகும் போது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அதாவது ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருந்தது. கிட்டத்தட்ட 160 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிகில் படம் எடுக்கப்பட்டது. மேலும் 300 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இதனால் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் மதுரை அன்புச்செல்வன் ஆகியோர் வீடு மற்றும் தொழில் இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அதன் பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தொடர்ந்து நிறைய குடைச்சல்கள் வரத் தொடங்கியது.

Also Read : விஜய்க்கு போட்டியாக வசூல் மன்னனாக களமிறங்கும் சூர்யா.. லியோ படத்தை விட அதிக லாபத்தை பார்த்த ரோலக்ஸ்

இப்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய ஏஜிஎஸ் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி பழைய படத்தின் தோல்வியால் மிகுந்த கஷ்டத்தில் இருந்தோம்.

அதை மீட்டெடுத்து மிகப்பெரிய உச்சிக்கு கொண்ட சென்றது லவ் டுடே படம் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் பிகில் படம் பிளாப்பா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் பிகில் படத்தின் போது அவர் சந்தித்த பிரச்சனையின் வெளிப்பாடு இது என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : நேருக்கு நேர் சந்திக்கப் போகும் கமல், விஜய்.. குருவுக்காக லோகேஷ் செய்ய இருக்கும் சம்பவம்

- Advertisement -

Trending News