எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் பிரதீப் ரங்கநாதன்.. லவ் டுடே படத்தால் சிம்பு இடத்தை தட்டி தூக்கிய ஹீரோ

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இன்றைய கோலிவுட் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனராக பார்க்கப்படுகிறார். ஒரு படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் என்றே சொல்லலாம். ஒரு இயக்குனராகவும், புதுமுக ஹீரோவாகவும் வெற்றி கண்டிருக்கிறார் பிரதீப்.

பிரதீப் ரங்கநாதன் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பெயரை தற்போது வாங்கி இருக்கிறார். தான் இயக்கிய இரண்டு படங்களின் மூலமும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை மட்டுமே வாரி வழங்கி இருக்கிறார் பிரதீப். இதனாலேயே தயாரிப்பாளர்கள் இவருடன் படம் பண்ணுவதற்கு நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: அள்ளிக் கொடுத்த 100 கோடி வசூல் கிள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.. லவ் டுடே படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்

சமீபத்தில் இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இன்றைய இளசுகளின் பல்சை சரியாக புரிந்து கொண்டு காட்சிக்கு காட்சி எதார்த்தத்தை வைத்து இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பத்து மடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கிறது. மேலும் இந்த படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படும்போது அங்கேயும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது இந்த படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்பு மேல் வாய்ப்பு குவிந்து கொண்டே இருக்கிறது.

Also Read: நடிகைகளை கேவலமாக விமர்சித்த பிரதீப்.. வாய்ப்பு தராததால் வம்புக்கு இழுக்கும் கோமாளி பட ஹீரோயின்.!

சமீபத்திய தகவலின் படி லவ் டுடே திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கிறார். மேலும் அந்தத் திரைப்படத்தை இவரே தயாரிக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தமிழிலும் ஹீரோவாக இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் பிரதீப். பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் பிரதீப் காட்டில் அதிர்ஷ்ட மழை அடித்து கொண்டிருக்கிறது.

மேலும் நடிகர் சிம்பு பத்து தல திரைப்படத்திற்கு பிறகு கொரோனா குமார் என்னும் திரைப்படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு இடையில் தற்போது கொரோனா குமார் திரைப்படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சிம்புவுக்கு பதிலாக ஹீரோவாக நடிக்க இருக்கிறார். தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையின் மூலம் சிம்புவின் படத்தையே தன் கைவசம் கொண்டு வந்து விட்டார் பிரதீப் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

Also Read: கோடம்பாக்கத்தில் குஸ்தியை ஏற்படுத்தும் லவ் டுடே பிரதீப்.. நன்றி கடனுக்காக செய்த வேலையால் வந்த விபரீதம்

Next Story

- Advertisement -