பாரதிகண்ணம்மா சீசன் 2வில் தொலைந்து போன மகள்கள்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட கதைக்களம்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது அதனுடைய இரண்டாம் பாகத்தை குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதில் யாரும் எதிர்பாராத அளவுக்கு சீசன் 2வின் கதைக்களம் இருப்பதால், பாரதிகண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகத்தை விரைவில் துவங்கவும் விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. இதில் தற்போது டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்காக காத்திருக்கும் பாரதி மறுபடியும் வெண்பாவின் சூழ்ச்சிகளில் சிக்குகிறார்.

Also Read: ஜவ்வுமுட்டாய்க்கே டஃப் கொடுத்த பாரதி கண்ணம்மா.. கதை இல்லேன்னா இப்படியா உருட்டுவீங்க

அவர் மாற்றி வைத்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் மூலம் மீண்டும் கண்ணம்மா மீது அபாண்டமாக பழி சுமத்தியதால் கோபத்தில் கண்ணம்மா ஊரை விட்டு கிளம்புகிறார். அப்போது அவர்களை கொலை செய்வதற்காக வெண்பா, அவர்கள் செல்லும் காரை லாரியை வைத்து ஆக்சிடென்ட் செய்து விடுகிறார்.

அந்த ஆக்சிடென்ட் மூலம் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் பிரிந்து விடுகின்றனர். அதில் லட்சுமி ஒரு பணக்கார தம்பதி எடுத்து வளர்த்து அவளை டாக்டர் படிக்க வைத்து விடுகின்றனர். அதே நேரத்தில் ஹேமா ஆட்டோ டிரைவராக மாறி விடுகிறார்.

Also Read: டிஆர்பிக்காக தரமான ஆளை இறக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 வையல் கார்ட் என்ட்ரி

இவர்கள் இருவரும் கண்ணமாவுடன் இருந்த நினைவுகளை நினைத்தபடியே வாழ்ந்து வருகின்றனர். ஒரு முறை காரில் லட்சுமியும் ஆட்டோவில் ஹேமாவும் வந்து கொண்டிருக்கும்போது ஆக்சிடென்ட் ஆகிவிடுகிறது. அதில் லட்சுமி மயங்கி விடுகிறார். உடனே ஆட்டோ டிரைவர் ஆன ஹேமா தன்னுடைய ஆட்டோவில் லட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.

இவர்கள் இருவரின் கையில் கே எல் என்னும் பச்சை குத்தி இருக்கின்றனர். இவ்வாறு இரண்டாம் சீசனில் பாரதிகண்ணம்மா சீரியலில் ஹேமா மற்றும் லட்சுமி தான் கதாநாயகிகளாக வைத்து கதையை உருவாக்கியுள்ளனர்.

Also Read: அது மட்டும் வரட்டும் உன்ன வச்சிக்கிறேன்.. பாரதியைப் பைத்தியம் பிடிக்க வைத்த கண்ணம்மா

இந்த வீடியோவானது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. மேலும் முதல் சீசனை விட எதிர்பார திருப்பத்தைக் கொண்ட 2ம் சீசன் கலைக்கட்டும் என்றும் சின்னத்திரை ரசிகர்கள் இதை தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

டாக்டர் ஆன லட்சுமி, ஆட்டோ டிரைவர் ஆன ஹேமா

bharathi-kannamma-2-cinemapettai
bharathi-kannamma-2-cinemapettai

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -