கமலால் ஏற்பட்ட நஷ்டம்.. 5 படங்களை எடுத்து கடனை அடைத்த தயாரிப்பாளர்

உலக நாயகன் கமலஹாசன் எப்போதுமே தனது படங்களில் தனித்துவமான விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதை விரும்பக்கூடியவர். இதனால் மெனக்கெட்டு பல விஷயங்களை தனது படங்களை கொண்டுவர தற்போது வரை முயற்சி செய்து வருகிறார். அதுமட்டும்இன்றி தமிழ் சினிமாவில் நிறைய புது தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது கமல் தான்.

தமிழில் நடிகர் மட்டுமல்லாமல் சினிமாவில் கமலின் அர்ப்பணிப்பு அளப்பரியாதது. அதாவது இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இப்படி இருக்கையில் இப்போது இளம் நடிகர்களின் படங்களை எடுப்பதில் ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்ற நடிகர்களின் படங்களை தயாரிக்க இருக்கிறார்.

Also Read : ஏவிஎம் தயாரிப்புடன் கூட்டணி அமைத்து எஸ். பி. முத்துராமன் கொடுத்த 6 ஹிட் படங்கள்.. ரஜினி, கமலை தூக்கி விட்டு அழகு பார்த்த இயக்குனர்

இந்நிலையில் முன்பு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கமலினால் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளார். அந்தக் கடனை அடைப்பதற்காக அடுத்த ஐந்து படங்களை எடுத்து அதில் வந்த வருமானம் மூலம் ஈடு கட்டி உள்ளார். அதாவது கலைப்புலி எஸ் தாணு டாப் நடிகர்களின் பல படங்களை தயாரித்துள்ளார்.

அந்த வகையில் கமலின் கேரியரில் முக்கியமான படமாக பார்க்கப்படும் ஆளவந்தான் படத்தையும் கலைப்புலி எஸ் தாணு தான் தயாரித்திருந்தார். இப்போது வரை அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் போட்ட பட்ஜெட்டில் பாதியைக் கூட அப்போது வசூலிக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Also Read : ஷங்கரிடம் கரராக சொன்ன கமல்.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு இந்தியன் 2 வில் செய்யும் புதிய முயற்சி

கமல் ஆரம்பத்தில் ஆளவந்தான் படம் எடுப்பதற்கு முன்பாகவே தாணுவிடம் வேறு ஒரு கதையை கூறியுள்ளார். அதாவது பம்மல் கே சம்பந்தம் படத்தின் கதையை தான் எடுப்பதாக தயாரிப்பாளரிடம் கமல் கூறியிருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும்போது கலைப்புலி தாணு கமல் வேறு கதையை எடுப்பதை உணர்ந்திருக்கிறார்.

ஆனாலும் கமல் உடன் படம் பண்ணுவது பாக்கியம் என்று நினைத்து தாணு எதுவுமே சொல்லவில்லையாம். கடைசியில் படம் மிகப்பெரிய நஷ்டத்தை தான் சந்தித்து இருக்கிறது. இதெல்லாம் சமீபத்திய பேட்டி ஒன்று அவர் கூறியிருந்தார். இப்போதும் கமலின் படங்களை எடுத்துப் பார்த்தால் ஆளவந்தான் படம் பேசப்படும் படமாக உள்ளதாகவும் தாணு கூறியிருந்தார்.

Also Read : டாப் இயக்குனருடன் பல கோடி லாபத்தை பார்க்க கமல் தீட்டிய பிளான்.. வேறு வழியில்லாமல் ஓகே சொன்ன ரஜினி!