ஆட்டத்தை நாசுக்காக ஆரம்பிக்கும் ஆண்டவர்.. கவுண்டர் போட்டு கலாய்த்த ஜி பி முத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பு பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சண்டை போட்டு நிகழ்ச்சியின் சுவாரசியத்தை உயர்த்தும் போட்டியாளர்கள் இன்று ஆண்டவரை சந்திக்க இருக்கின்றனர். அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இரண்டு ப்ரோமோக்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களை சந்திக்கும் ஆண்டவர் நாசுக்காக தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். அதாவது பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே சாப்பாடு பிரச்சனை பெரும் அக்கப்போரை கூட்டிக் கொண்டிருக்கிறது.

Also read : மகேஸ்வரியுடன் குழாயடி சண்டைக்கு தயாராகும் போட்டியாளர்.. உச்சகட்ட மோதலில் பிக்பாஸ் வீடு

சாம்பாரில் ஆரம்பித்து உப்புமா வரை பெரிய சர்ச்சையான விஷயமாக இருக்கிறது. அதை பற்றி பேசிய கமல் கிச்சன் குழுவில் இருக்கும் சாந்தியிடம் வெளியில் வரும்போது சொல்லி அனுப்புனாங்க கொஞ்சம் ஏமாந்தா உங்களுக்கே உப்புமா கொடுத்துடுவாங்க என்று கலாய்க்கிறார். இதைக் கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்கின்றனர்.

அப்படியே மகேஸ்வரி இடம் திரும்பிய கமல் நல்லா முட்டிக்கிறீங்க போல என்று மறைமுகமாக சாந்திக்கும் அவருக்கும் இருக்கும் பிரச்சனையை கேட்கிறார். அதன் பிறகு கண்ணாடில முட்டிக்கிட்டதை சொன்னேன் என்று நேற்று ஆர்வக்கோளாறில் மகேஸ்வரி முட்டிக்கொண்டு மண்டை வீங்கி கிடந்ததை பற்றியும் பேசினார். இப்படி பயங்கர உற்சாகமாக வந்த கமல் அடுத்ததாக ஜிபி முத்துவை டார்கெட் செய்தார்.

Also read : யூடியூபால் ஜிபி முத்துவுக்கு கிடைத்த மறுவாழ்வு.. மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

ஆனால் ஆண்டவரையே குழப்பும் அளவுக்கு ஜிபி முத்து பேசியதுதான் ஹைலைட்டாக இருந்தது. அதாவது பாதாமை கையில் வைத்திருக்கும் ஜி பி முத்துவிடம் பாதாம் பற்றி தெரியுது, ஆதாம் யாருன்னு தெரியலையா, இதனால அவரு எவ்வளவு வருத்தப்படுறாரு தெரியுமா என்று சென்ற வாரம் நடந்த விஷயத்தை நினைவு கூறுகிறார்.

உடனே ஜிபி முத்து ஆதாமா அவர் எங்கே இருக்கிறார் என்று வெள்ளந்தியாக கேட்கிறார். இப்படி ரகளையாக இருக்கும் ப்ரோமோ தற்போது வேற லெவலில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. அதனால் ஜிபி முத்து மற்றும் ஆண்டவரின் அட்ராசிட்டியை காண ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : சந்தகட போல் மாறிய பிக்பாஸ் வீடு .. மொத்த வெறுப்பையும் சம்பாதிக்த போட்டியாளர்கள்

Next Story

- Advertisement -