கடைசியில் சிவகார்த்திகேயனுக்கு இந்த நிலைமையா?. கெட்ட நேரத்தால் அடி மேல் அடி வாங்கும் பரிதாபம்

Sivakarthikeyan: ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவருக்கு தொடர்ந்து நடக்கிறது எல்லாமே தவறாகத்தான் முடியும் என்று சொல்வார்கள். இந்த நிலைமையில் தான் தற்போது சிவகார்த்திகேயன் மாட்டிக் கொண்டார். அதாவது கொரோனா காலத்திற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அந்த வகையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் இப்படம் வெளிவராமல் திண்டாடிக் கொண்டு வருகிறது. அதாவது சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த மாவீரன் படத்தில் வீரன் குரலுக்கு விஜய் சேதுபதி பேசி இருப்பார். இந்த குரலுக்கு இவர் பேசினால் கரெக்டாக இருக்கும் என்று யோசித்து விஜய் சேதுபதியிடம் கேட்டார்கள். அதற்கு அவரும் ஒத்துக் கொண்டார். அவர் ஒத்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் மிஸ்கின் காக மட்டுமே தான்.

அதே மாதிரி அயலான் படத்திலும் ஏலியன்ஸ்-க்கு வாய்ஸ் கொடுக்க சில முக்கிய நடிகர்களின் குரல் தேவைப்படுகிறதாம். அதற்கு ஏற்ற மாதிரி குரல் கொடுப்பதற்கு சந்தானம் மற்றும் வடிவேலு வந்தால் நல்லா இருக்கும். மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Also read: வெளியில் தலை காட்ட முடியாமல் தவித்த சிவகார்த்திகேயன்.. ஒரே வார்த்தையில் இமான் வைத்த முற்றுப்புள்ளி

ஆனால் இந்த பேச்சு வார்த்தைக்கு சந்தானம் கொஞ்சம் கூட பிடியை கொடுக்காமல் இருந்து வருகிறார். சும்மாவே சந்தானத்துக்கு சிவகார்த்திகேயனை கண்டாலே பிடிக்காது. இதுல அவர் படத்துக்கு வாய்ஸ் கொடுக்கணும் என்றால் வந்துவிடவா போறாரு. இதுதான் சான்ஸ் என்று எந்த வித பதிலும் சொல்லாமல் அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதன் பிறகு வடிவேலுவிடம் பேசி இருக்கிறார்கள். ஆனால் அவர் இன்னும் வரை எந்தவித பதிலும் சொல்லவில்லை. அவர் தற்போது ஹீரோவாகவும், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருவதால், அதில் மட்டுமே அவருடைய முழு கவனமும் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை பற்றி கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் இருக்கிறார்.

ஆனால் எப்படியும் வடிவேலு சம்மதம் கொடுத்துவார் என்ற நம்பிக்கையில் மொத்த பட குழுவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் தற்போது சிவகார்த்திகேயன் பெயர் வேற சமூக தலங்களில் கண்ணா பின்னா என்று டேமேஜ் ஆகிவிட்டது. அதனால் இதற்கு மேலையும் இவருடைய படத்திற்கு எந்த ஒரு நடிகர்களும் குரல் கொடுப்பதற்கு முன்வர மாட்டார்கள் என்று காரசாரமான பேச்சு வார்த்தைகள் வருகிறது. கடைசியில் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஒரு நிலைமையா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பரிதாப நிலையில் தவித்து வருகிறார்.

Also read: சிக்கி சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்.. கடன், கள்ளகாதல் என அவரை சுற்றும் சனி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்