ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அடுத்த ஐந்து வருடத்திற்கு படு பிஸியாக இருக்கும் லோகேஷ்.. கைவசம் இருக்கும் 5 படங்கள்

தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவில் டாப் நடிகர்கள் தேடப்படும் இயக்குனராக மாறி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏனென்றால் அவர் இயக்கும் படங்கள் டாப் நடிகர்களின் அதிக வசூல் செய்த படமாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்த 5 வருடங்களுக்கு லோகேஷ் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அப்படி லோகேஷ் லைன் அப்பில் உள்ள படங்களை பார்க்கலாம்.

லியோ : மாஸ்டர் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு தளபதி விஜய் மற்றும் லோகேஷ் இணைந்துள்ள படம் லியோ. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

Also read: லியோ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி.. லோகேஷின் மாஸ்டர் பிளான்

தலைவர் 171 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாகவே முன்வந்து லோகேஷ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ரஜினிகாந்தின் கடைசி படம் லோகேஷின் படமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதில் விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களை நடிக்க வைக்க திட்டம் தீட்டி வருகிறாராம்.

கைதி 2 : கார்த்தியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக கைதி படம் அமைந்தது. மேலும் விக்ரம் படத்தில் கைதி டில்லியின் குரல் மட்டும் ஒலித்தது. இந்நிலையில் கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக லோகேஷ் அறிவித்திருந்தார். இதற்காக கார்த்தி இப்போது ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also read: ரஜினி வீட்டில் திருடியதற்கு வேலைக்காரி கூறிய அதிர்ச்சி பதில்.. எவ்வளவு கொடுத்தாலும் பத்தல

விக்ரம் 2 : உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த படம் விக்ரம். மீண்டும் இதே கூட்டணியில் விக்ரம் 2 படம் உருவாக இருக்கிறது. மேலும் விக்ரம் 2 படம் லோகேஷ் எல்சியு வில் இடம் பெற இருக்கிறது. இதற்காக கமல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ரோலக்ஸ் : லோகேஷின் விக்ரம் படத்தில் சூர்யாவின் 5 நிமிட ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இத்தனை வருட திரை வாழ்க்கையில் சூர்யா முதன்முதலாக வில்லனாக விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இப்போது ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து முழு படத்தையும் லோகேஷ் எடுக்க இருக்கிறார்.

Also read: பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வரும் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விட வசூல் வேட்டையில் உலக நாயகன்

- Advertisement -

Trending News