உச்சம் தொட்டாலும் புகழ் போதையில் சிக்காத லோகேஷ்.. கமல் முதல் ரஜினி வரை பிரமிக்க வைக்க காரணம்

Lokesh Kanagaraj: இப்போது அதிகம் பேசப்பட்டு வரும் இயக்குனர் யார் என்று கேட்டால் லோகேஷ் கனகராஜ் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இவர் இப்போது தனக்கான ரசிகர்கள் வட்டத்தை பெருக்கி இருக்கிறார். அது மட்டும் இன்றி தற்போது இவர் இயக்கி வரும் லியோ படத்துக்கும் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே விக்ரம் படத்தின் மூலம் சர்வதேச அளவில் மிரட்டிய இவர் இப்போது அனைத்து டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் இயக்குனராக இருக்கிறார். இதுவே இவருக்கு கிடைத்த வெற்றி. அதன் காரணமாகவே ரஜினி முதல் கமல் வரை அனைத்து நடிகர்களும் இவரை பார்த்து பிரமித்து போகின்றனர்.

Also read: சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் அடுத்த படம்.. ரஜினியின் நண்பர் நினைவாக எடுத்த முடிவு

அந்த அளவுக்கு இவர் வெற்றியில் உச்சம் தொட்டாலும் புகழ்போதையில் சிக்காமல் இருக்கிறார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். சமீபத்தில் இவர் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அப்போது இவர் மாணவர்களிடம் பேசிய பண்பு பலரையும் வியக்க வைத்தது.

மாணவர்கள் லியோ படம் மீது இருந்த ஆர்வத்தினால் பல்வேறு விதமான கேள்விகளை இவர் முன் வைத்தனர். அதையெல்லாம் கேட்டுக் கொண்ட லோகேஷ் எந்த முக்கியமான விஷயமும் கசியாகவாறு அவர்களுக்கு தன்மையாக பதில் அளித்தார். அதிலும் ஒரு மாணவர் இவருடைய பர்சனல் விஷயத்தை கேட்டார்.

Also read: ஜெயிலரால் மொத்த சொத்தையும் இழந்து தயாரிப்பாளர்.. ரஜினியை மலைபோல் நம்பி வைத்த கோரிக்கை

அதற்கு லோகேஷ் கோபப்படாமல் பர்சனல் விஷயங்கள் வேண்டாமே என்று கூறினார். மேலும் ஒரு பெண் இவர் காலில் விழுந்த போது கூட இப்படி செய்யக்கூடாது என்று கூறினார். அதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட போதும் பொறுமையாக அனைத்துக்கும் பதில் அளித்தார்.

இப்படி அனைத்து விஷயத்திலும் கவனமாகவும் அதே சமயம் ப்ராக்டிக்கலாகவும் நடந்து கொள்ளும் இவருடைய குணம் தான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. சில இயக்குனர்கள் ஒரு ஹிட் படம் கொடுத்து விட்டாலே தலைகால் புரியாமல் ஆடும் சூழலில் லோகேஷ் தன்னடக்கத்துடன் நடந்து கொள்வது அவருக்கான புகழை உயர்த்திக் கொண்டிருக்கிறது.

Also read: லோகேஷை மானஸ்தர் என்று புகழ்ந்த ப்ளூ சட்டை.. 2k கிட்ஸ் அக்கப்போரால் கடுப்பாகி போட்ட பதிவு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்