லோகேஷை மானஸ்தர் என்று புகழ்ந்த ப்ளூ சட்டை.. 2k கிட்ஸ் அக்கப்போரால் கடுப்பாகி போட்ட பதிவு

Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை எடுத்திருக்கிறார். விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவுற்றது. இந்த சூழலில் சமீபகாலமாக பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சினிமா பிரபலங்களை தலைமை தாங்க அலைகிறார்கள்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயமுத்தூர் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கலந்து கொண்டார். அப்போது இளைஞர்களுக்கு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கி இருந்தார்.

Also Read : முரட்டு நடிகரையே பிஆர்ஓ ஆக மாற்றிய லோகேஷ்.. ஓவர் துதி பாடும் கமல் நண்பர்

அப்போது ஒரு மாணவிக்கு பரிசு வழங்கும் போது அவர் லோகேஷின் காலில் விழுந்து விட்டார். மேடையிலேயே கடுப்பான லோகேஷ் திட்டிவிட்டார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது சினிமா பிரபலங்களின் கால்களில் விழுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அந்த மாணவியை கடிந்து கொண்டார். அவர் செய்தது சரியான காரியம். இவ்வாறு 2K பூமர்ஸ் செய்வதற்கு கல்லூரி நிர்வாகம் தான் முக்கிய.

Also Read : 1000 கோடி வசூலில் இணையுமா லியோ? தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கியது போல் பதிலை சொன்ன லோகேஷ்

ஏனென்றால் கல்லூரி வளாகத்தினுள் பட பிரமோஷனுக்காக திரைப்படக் கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு காரணமாக இது போன்ற விளைவுகள் ஏற்பட்ட வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் அரங்கேற்றப் போகிறார்களோ என்று ப்ளூ சட்டை பதிவு போட்டு இருக்கிறார்.

அதாவது சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சத்திற்காக உருவாக்கப்பட்டது. மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் இப்போது படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கு அறிவுரை சொல்வது நல்ல விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. மாணவர்கள் எதார்த்தத்தை புரிந்து கொண்டு தனது கனவை எதிர்நோக்கி செல்ல வேண்டும் என்பதுதான் பலரது கருத்து.

blue-sattai-maran-lokesh
blue-sattai-maran-lokesh

Also Read : வங்கி வேலையை விட இதுதான் காரணமாம்.. வித்தியாசமாக மனுஷன் என நிரூபித்த லோகேஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்