தளபதி 67 டைட்டிலை உறுதி செய்த லோகேஷ்.. தனி உலகத்தை உருவாக்க போகும் விஜய்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியானது தான். இது குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு முறை மேடையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் மாஸ் மற்றும் கிளாஸாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் அறிவிப்புக்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்திற்கு லோகேஷ் நான் வாழும் உலகம் என்ற பெயரை முடிவு செய்துள்ளாராம். முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளில் இந்த படம் மிரட்டலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தில் ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதேபோன்று அவர் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படத்தின் தலைப்பை வைத்து பார்க்கும் போது விஜய் தனக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்கி பட்டையை கிளப்புவார் என்று தெரிகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகவும் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Next Story

- Advertisement -