கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த லோகேஷ் பட நடிகர்.. அட அவரு அதிரடி ஆளாச்சே!

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது அவரது நடிப்பில் நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து தனுஷ் அருண் மாதேஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார்.

ராக்கி, செல்வராகவனின் சாணிகாகிதம் போன்ற படங்களை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். தற்போது முதல்முறையாக தனுசுடன் கைகோர்த்து கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது சுதந்திர கிடைப்பதற்கு முன் உள்ள கதை அம்சம் கொண்ட படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read :சிம்புக்கு போட்டியாக டீசரை இறக்கிவிட்ட செல்வராகவன்.. சைக்கோவாக மிரட்டும் தனுஷ்

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. மேலும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் கதாநாயகன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

அதாவது லோகேஷன் முதல் படமான மாநகரம் படத்தில் கதாநாயகனாக நடித்த சந்தீப் கிஷன் இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுமேஷ் மூர் என்பவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளதாக நம்பகத் தகுந்த இடத்திலிருந்து தகவல் வந்துள்ளது.

Also Read :சிம்புவை வம்பு இழுக்கும் தனுஷ்.. அப்பதான் ஆட்டம் சூடு பிடிக்கும்

கேப்டன் மில்லர் படம் பான் இந்திய படமாக ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்களை கவருவதற்காக சந்திப் கிஷனை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் ஏழாம் தேதி தொடங்க உள்ளது.

அதுவும் தென்காசி சுற்றியுள்ள வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் மில்லர் படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read :உருவ கேலிக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை.. தனுஷ், விஜய் சேதுபதி ஒப்பிட்டு ஆவேசம்