சிம்புக்கு போட்டியாக டீசரை இறக்கிவிட்ட செல்வராகவன்.. சைக்கோவாக மிரட்டும் தனுஷ்

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் டீசர் இப்போது வெளியாகி இருக்கிறது. வெந்து தணிந்தது காடு சிம்பு படம் ரிலீசான இன்றைய நாளில் சிம்புவுக்கு போட்டியாக டீசரை இறக்கி விட்டு இருக்கிறார் செல்வராகவன் .

இந்த படத்தின் கதைக்களம் ஒரு சைக்கோ கதையை மையமாக கொண்டது போல் இருக்கிறது. மேலும் தனுஷ் இந்த டீசரில் இரண்டு கெட்டப்பில் வருகிறார். எனவே இது டூயல் கதையாக இருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது ஸ்லிப் பர்சனாலிட்டி கேரக்டர் போல் ஏதேனும் சைக்கோ தொடர்புடைய கதையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Also Read: அந்த விஷயத்தில் செல்வராகவனை பின்பற்றும் தனுஷ்.. அதிரடியாக போட்ட கண்டிஷன்

வீரா சூரா பாடலுக்கு நடுக்காட்டில் ஆடும் தனுஷ் 20 வருடங்களுக்கு முன் அவர் நடித்த காதல் கொண்டேன் படத்தை நியாபகப்படுத்துகிறார் . இந்த டீஸரின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் செல்வராகவனின் என்ட்ரி தான். இவரும் காடுகளில் இருந்து தோன்றும் போது சைக்கோ கேரக்டரை போல் தான் தெரிகிறது.

துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்கு பிறகு தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணியில் யுவன்ஷங்கர் ராஜா சேர்ந்திருக்கிறார்.

Also Read: ஹாலிவுட் ஹீரோயினுடன் கைகோர்க்கும் தனுஷ்.. பக்காவா பிளான் போட்ட செல்வராகவன்

இந்த படத்தில் எல்லி அவ்ராம் என்னும் பாலிவுட் நடிகை அறிமுகமாகிறார். மேலும் இந்துஜாவும் இந்த படத்தில் நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து வரும் தனுஷின் மீது இந்த படத்தினால் மேலும் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

தனுஷ்-செல்வராகவன்-யுவன் என்ற கூட்டணியில் படத்தின் அப்டேட் வரும் போதே ரசிகர்களின் எதீர்பார்ப்பு ஹைப்பாகி விட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் டீசர் வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது.

Also Read: ஒரே சமயத்தில் 9 படத்தில் கமிட்டான தனுஷ்.. முன்னணி இயக்குனர்களின் மொத்த லிஸ்ட்