இந்த வருடம் வெளியான 5 படங்களின் முதல் நாள் வசூல்.. நம்பர் ஒன் இடத்தை விட்டுக் கொடுக்காத சூப்பர் ஸ்டார்

First day Collection Movies: சமீப காலமாகவே புது படங்கள் மக்களிடம் கோலோச்சியாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 20 படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிக்கொண்டே வருகிறது. அதிலும் முன்னணி நடிகர்களின் படம் என்றால் ரசிகர்கள் மத்தியில் தனி மவுஸ் தான். அந்த வகையில் இந்த வருடத்தில் சில படங்கள் ரிலீஸ் ஆன முதல் நாளிலே அதிக அளவில் வசூலை பெற்றிருக்கிறது. அந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்த வருடம் வெளியான படங்களில் தற்போது வசூல் ரீதியாக ஐந்தாவது இடத்தில் இருப்பது தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம். இப்படம் தமிழ் ரசிகர்களை அந்த அளவிற்கு திருப்தி படுத்தவில்லை என்றாலும், தெலுங்கு ரசிகர்களை கொண்டாட வைத்தது. அந்த வகையில் இப்படம் ரிலீசான முதல் நாள் மட்டுமே 14.40 கோடி வசூலை பெற்றது.

Also read: மாலத்தீவில் நடக்காதது ஜெயிலர் ரிலீஸில் நடந்து விட்டதே.. தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்த முத்துவேல் பாண்டியன்

மேலும் நான்காவது இடத்தில் இந்த வருடம் பொங்கல் தினத்தன்று அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் இவருடைய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவரது கவனத்தையும் ஈர்த்த படமாக வெற்றி பெற்றது. அந்த வகையில் இப்படம் வெளியான முதல் நாளிலே 39.60 கோடி வசூலை பெற்று லாபத்தை கொடுத்தது.

எப்போதுமே வசூல் மன்னனாக பார்க்கப்பட்டு வரும் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரை நம்பி நடித்தார். இப்படத்தை சென்டிமென்ட் வைத்து குடும்பங்களை கவரும் வகையில் அமைந்ததால் வணிக ரீதியாக லாபத்தை பெற்றது. அந்த வகையில் இப்படம் முதல் நாள் வசூல் 47.20 கோடியை பெற்றுக் கொடுத்தது.

Also read: விஜய் சுட்டு சூப்பர் ஹிட்டான 5 தெலுங்கு படங்கள்.. மகேஷ்பாபு படத்தையே விடாமல் துரத்தும் தளபதி

மேலும் இரண்டாவது இடத்தில் மணிரத்தினம் என்றாலே வசூல் அளவிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும். அப்படி இவர் இயக்கத்தில் வரலாற்று படமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மக்களுக்கு பிடித்த மாதிரி அமைந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் இப்படத்திற்கு முதல் நாள் வசூல் ஆக 54.02 கோடி லாபத்தை கொடுத்திருக்கிறது.

இவர்களுடைய வசூலை எல்லாம் முறியடிக்கும் வகையில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களிலே அதிக லாபத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை யாருமே தொடாத அளவிற்கு முதல் நாள் வசூலாக இப்படம் 91.20 போடி லாபத்தை பெற்று முதல் இடத்தில் சூப்பர் ஸ்டார் இடம் பிடித்து விட்டார். நம்பர் 1 எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வசூல் அளவில் சாதனை படைத்திருக்கிறார்.

Also read: வெளிநாடுகளில் விஜய் இல்லாமல் வசூல் சாதனை படைத்த 7 தமிழ் படங்கள்.. போர் தொழில் மொத்த வசூலை மிஞ்சிய ரஜினி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்