அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாரான லோகேஷ்.. அதிரடியாக கண்டிஷன் போட்ட விஜய்

மிகப்பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி இருக்கிறார். பல நாட்களாக காஷ்மீரில் படபிடிப்பை நடத்திய படக்குழு சமீபத்தில் தான் அந்த ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்கள்.

சில நாட்கள் ஓய்விற்கு பிறகு லோகேஷ் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட விஜய் தற்போது அதிரடியாக ஒரு கண்டிஷன் போட்டு இருக்கிறாராம். அதாவது காஷ்மீர் படப்பிடிப்பின் போது டெக்னீசியன்கள் உட்பட அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானது அனைவருக்கும் தெரியும்.

Also read: விஜய்க்காக தன்னோட ஸ்டைலையே மாற்றிய லோகேஷ்.. இதுவரை செய்யாத பெரிய சம்பவமா இருக்குமோ

கடும் குளிரின் காரணமாக அலர்ஜி, காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்க நேரிட்டது. ஆனாலும் அவர்கள் அனைவரும் தங்கள் வேலைகளை அர்ப்பணிப்புடன் செய்து கொடுத்திருக்கிறார்கள். இது குறித்த ஒரு வீடியோவையே தயாரிப்பு தரப்பு வெளியிட்டு லியோ படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் மரியாதை கலந்த நன்றியை தெரிவித்து இருந்தது.

இதையெல்லாம் மனதில் வைத்து தான் விஜய் அடுத்த கட்ட ஷூட்டிங்கை சென்னையிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து ரொம்பவும் சிரமப்பட்டு விட்டார்கள். அதனால் தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

Also read: விஜய் பட வில்லனுக்கு வந்த பகிரங்க மிரட்டல்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவது உறுதி

என்னவென்றால் ஏற்கனவே பெப்சி அமைப்பு முன்னணி நடிகர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்திருந்தது. அதாவது இப்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் அனைவரும் ஹைதராபாத் போன்ற வெளியிடங்களில் தான் தங்கள் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதனால் நம் தமிழ் திரையுலக தொழிலாளர்கள் சரியான வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இதையெல்லாம் யோசித்து தான் பெப்சி அமைப்பு முடிந்தவரை சென்னையிலேயே ஷூட்டிங் நடத்திக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்தது. அதை பல நடிகர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இந்த காரணங்களால் தான் விஜய் இப்படி ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட லோகேஷும் தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடத்துவதற்கான வேலையை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read: கமலின் கனவு படத்தில் நடிக்க துணிந்த விக்ரம்.. உண்மையை போட்டுடைத்த விக்ரம் பட ஏஜென்ட்

Next Story

- Advertisement -