வெளியில் தலை காட்டாமல் இருக்கும் வெங்கட் பிரபு.. தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய லோகேஷ்

வெங்கட் பிரபு மாநாடு படத்திற்குப் பிறகு இவருடைய இயக்குனர் இமேஜ் உயர்ந்து விட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை எடுத்தார். ஆனால் இப்படம் படும் மோசமான தோல்வியை அடைந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோற்றுப் போய்விட்டது.

இந்நிலையில் தான் தற்போது விஜய்யின் 68வது படத்தை இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். விஜய் மற்றும் வெங்கட் பிரபு காம்பினேஷன் உறுதியாக நிலையில் அஜித்தின் மங்காத்தா படத்தை போல் கதை அம்சம் இருக்கும் என்று தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: ஜி.பி முத்து வைத்து வெங்கட் பிரபுவிடம் வம்புக்கு இழுத்த ரிப்போர்ட்டர்.. தளபதி இயக்குனர் கொடுத்த பதிலடி

அதே நேரத்தில் வெங்கட் பிரபுவுக்கு அடி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது. அதாவது என்னவென்றால் சமீப காலமாக பல பெரிய ப்ராஜெக்டுகள் எல்லாம் அறிவிப்பு வந்த நிலையில் கூட ஒரு சில காரணங்களால் அப்படியே டிராப் ஆகி இருக்கிறது. சமீபத்தில் கூட அஜித், விக்னேஷ் சிவன் ப்ராஜெக்டை  ரிஜெக்ட் செய்து விட்டார்.

ஏற்கனவே இந்த மாதிரியான விஷயங்கள் ஆனதுனால எங்கே நம்முடைய பிராஜெட்டும் கைநழுவி போய்விடுமோ என்று ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். அதனால் வெங்கட் பிரபு வெளியே கூட தல காட்டாமல் இருந்து வருகிறார். ஏனென்றால் வெளியே போனால் அனைவரும் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி தளபதி 68 பற்றிய அப்டேட்கள் தான் இருக்கும்.

Also read: முதல்முறையாக இணையும் 7 கூட்டணி.. இணையத்தையே அல்லோலபடுத்திய வெங்கட் பிரபு, தளபதி காம்போ

அதனால் நாம் வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல் எதையாவது சொல்ல போக அதுவே ஏழரை கூட்டுற மாதிரி அமைந்து விடக்கூடாது என்பதால் சைலன்டாகவே இருக்கிறார். இதற்கிடையில் லோகேஷ் இந்த மாதிரியான விஷயங்களை அனுபவித்திருக்கிறார். அதாவது இவர் எங்கே வெளியே போனாலும் இவரிடம் கேட்கப்படும் கேள்வி லியோ படத்தை பற்றிய கேள்விதான்.

அது லோகேஷ்க்கு பெரிய அளவில் டார்ச்சர் ஆக இருந்திருக்கிறது. தற்போது தளபதி 68 அப்டேட் வெளியாகிய நிலையில், அப்பாடா இனிமேல் என்னிடம் ஏதும் அப்டேட் கேட்டு தொந்தரவு பண்ண மாட்டார்கள். அதற்கு பதிலாக வெங்கட் பிரபு மாட்டிக்கொண்டார். இனிமேல் அவரை தான் கேட்பார்கள் நாம் தப்பித்தோம் என்ற குஷியில் லோகேஷ் இருக்கிறார்.

Also read: தளபதி 68 விஜய்யுடன் மோத உள்ள சைக்கோ வில்லன்.. வெங்கட் பிரபுவின் தரமான செலக்சன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்