5 உளறு வாய்க்கு பிளாஸ்திரி போட்ட லோகேஷ்.. லியோ வெளி வருவதற்கு முன் மொத்த கதையும் தெரிஞ்சிரும் போல

Director Lokesh: லோகேஷ் கனகராஜ் தற்போது வாண்டட் இயக்குனராக மாறிவிட்டார். இதற்கு காரணம் கமல், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் போன்ற பல நடிகர்களை வைத்து விறுவிறுப்பான படத்தை திரில்லர் மூவியாக கொடுத்தது தான். அந்த வகையில் இப்பொழுது விஜய், லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

அத்துடன் இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்பொழுது வரை மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திருக்கிறது. இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது. ஆனால் இப்படத்தின் கதை இந்த மாதிரி இருக்குமா, எல்சியு கதையாக இருக்குமா என்று பல கேள்விகளை முன்வைத்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் பல ஆர்டிஸ்ட்கள் நடித்துள்ளார்கள்.

Also read: சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்கும் லோகேஷ்.. விக்ரமை விட 10 மடங்கு பயங்கரமாக இருக்கும் லியோ

அவர்கள் ஒவ்வொருவரும் கொடுக்கும் சில விஷயங்களை வைத்து இப்படித்தான் இருக்கும் என்று கதை ஓரளவுக்கு புரிந்து விட்டது. ஆனால் இப்பொழுதே கதை தெரிந்து விட்டால் இதில் சுவாரசியம் குறைந்து விடும். அத்துடன் வசூல் ரீதியாகவும் அடிபட்டு விடும் என்பதற்காக லோகேஷ் இப்படத்தில் நடித்த சில நடிகர்கள் வாய்க்கு பிளாஸ்திரி போட்டு அடைத்து இருக்கிறார்.

அதாவது இப்படத்தில் உளறு வாய்களாக இருக்கும் ஐந்து பேரை படம் ரிலீஸ் ஆகும் வரை கப்பிச்சிப்பின்னு வாயை மூடிகிட்டு அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார் லோகேஷ். அந்த வகையில் மன்சூர் அலிகானை முதலில் வாயை மூடிகிட்டு சும்மா இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் லீக் செய்யக்கூடாது என்று ஆர்டர் போட்டிருக்கிறார்.

Also read: வாய்ப்பு கொடுத்தே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசையமைப்பாளர்.. ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்ட பாடகி

இவரை தொடர்ந்து இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு மற்றும் இவருக்கு உதவியாளராக இருக்கும் தவசி ராஜ் இவர்கள் மூலமாகவும் எந்த ஒரு விஷயமும் வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக இவர்களையும் கூப்பிட்டு படம் திரையரங்குகளில் வரும் வரை மௌனம் காத்திருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

அத்துடன் சாண்டி மாஸ்டர் இவரிடமும் லியோ படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடக் கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். இப்படி இவர்கள் ஐந்து பேரையும் படத்தை பற்றி தயவு செய்து எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக மன்சூர் அலிகானை தேவையில்லாமல் அதிகமாக யாரிடமும் பேச வேண்டாம் என்று வார்னிங் கொடுத்து இருக்கிறார்.

Also read: லியோ பட வசூலை தொம்சம் செய்ய ரிலீஸ் ஆகும் 3 முக்கிய படங்கள்.. லோகேஷ், தளபதியை புலம்ப விட்டுட்டாங்க!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்