விஜய் டிவி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் புகழ். கலக்கப்போவது யாரு 6, குக் வித் கோமாளி போன்ற பிரபல நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
காக்டெய்ல் என்ற படத்தில் யோகிபாபுவுடன் நடித்து OTT தளத்தில் வெளிவந்தது. மாஸ்டர் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டதால் தளபதி ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கிக் கொண்டார்.
தற்போது விஜய் டிவியின் பிபி ஜோடிகள் மூலம் நடித்தும் வருகிறார், ஒரு சில பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் புகழுக்கு ரகசியமாக திருமணம் முடிந்து விட்டதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அவரது மனைவி ஒரு முஸ்லிம் என்றும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர். இதைத் தவிர விஜய் டிவி பிரபலங்களை கூப்பிட்டு விருந்து வைத்துள்ளார் புகழ். அங்கு வந்தவர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்ததாம்.
இதனால் பிரபல செய்தி தொடர்பாளர் புகழை நேரடியாக தொடர்பு கொண்டு உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த புகழ் நான் ஏறும் மேடையில் சிங்கிள், சிங்கிள் என்று அடித்துக் கூறுகிறேன். அப்படி இருக்க இந்த செய்தி எனக்கு சிரிப்பாக தான் இருக்கிறது.
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்தி விட்டார் புகழ். இதனால் விஜய் டிவி ரசிகைகள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர்.