வசமாக சிக்கிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா.. ஆதாரத்தோடு வெளியான லிவிங் ரிலேஷன்ஷிப் போட்டோ

Vijay Devarakonda-Rashmika: ஒரு படத்தில் சேர்ந்து நடித்து விட்டாலே சில ஜோடிகளுக்கு நிஜ வாழ்க்கையிலும் கெமிஸ்ட்ரி பத்திக்கும். அப்படி எத்தனையோ நட்சத்திரங்கள் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர். அப்படித்தான் தற்போது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரின் திருமணத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் சிக்குவோமா நாங்க என்ற ரீதியில் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் அதை வெளியில் சொல்லாமல் போக்கு காட்டி வருகின்றனர். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இவர்களின் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Also read: நம்ம நடிகைகளுக்கு ஆட்டம் காட்டும் 6 கன்னட நடிகைகள்.. தளபதிக்கு க்ரஷ் ஆன ராஷ்மிகா

அதாவது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் அதற்கான ஆதாரத்தையும் நெட்டிசன்கள் போட்டோவோடு வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே மாலத்தீவு சென்றபோது இவர்கள் இருவரும் மீடியாவில் வசமாக சிக்கினார்கள்.

அந்த வகையில் தற்போது இவர்கள் தனித்தனியாக வெளியிட்ட போட்டோவின் பேக்ரவுண்ட் ஒன்றாக இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அது விஜய் தேவரகொண்டாவின் வீடு தான் என்றும் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர் என்றும் ஒரு செய்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: ராஷ்மிகாவா, சமந்தாவா.? விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ரகசியம்

சமீபத்தில் கூட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இதே போன்ற போட்டோவை போட்டு தான் நெட்டிசன்கள் அவர்களின் காதல் சங்கதியை அம்பலப்படுத்தினார்கள். அதை தொடர்ந்து தற்போது இந்த போட்டோவும் அவர்களை வசமாக சிக்க வைத்திருக்கிறது. எப்படியும் இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வராது.

விஜய் தேவரகொண்டாவின் வீடு

vijay-devarakonda
vijay-devarakonda

ஆனாலும் ரசிகர்கள் வசமா மாட்டிகிட்டியே ராசா என்று இந்த ஜோடியை கிண்டலடித்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் தேவரகொண்டா தன் சோசியல் மீடியா பக்கத்தில் இரு கைகள் இணைந்திருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டு விரைவில் அறிவிக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இப்படி ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வசமாக சிக்கிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

rashmilka-mandana
rashmilka-mandana
- Advertisement -