வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நம்ம நடிகைகளுக்கு ஆட்டம் காட்டும் 6 கன்னட நடிகைகள்.. தளபதிக்கு க்ரஷ் ஆன ராஷ்மிகா

சினிமா துறையில் தமிழ் நடிகைகளை காட்டிலும் அக்கட தேசத்து நடிகைகள் தான் தற்பொழுது கோலிவுட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் கன்னடத்தில் இருந்து வந்த 6 நடிகைகள் இங்கு இருக்கும் நடிகைகளுக்கே பயங்கர டஃப் கொடுத்து வருகின்றனர். அதிலும் வாரிசில் விஜய்யின் தீவிர ரசிகையான  ராஷ்மிகாவே இணைந்து நடித்த ஹிட் கொடுத்தார்.

காயத்ரி சங்கர்: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் தான் நடிகை காயத்ரி. இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான 18 வயது என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமான நடிகையாக வலம் வருகிறார். அதிலும் தமிழ் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

Also Read: ரொம்ப சீக்ரெட்டாய் விஜய் சேதுபதியை வளைத்து போட்ட நடிகை.. ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி வரிசையில் தெறிக்க விடும் அம்மணி

நித்யா மேனன்: தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை நித்யா மேனன். அதனைத் தொடர்ந்து தமிழில் வெப்பம்,  ஓ காதல் கண்மணி போன்ற படங்களின் மூலம் பரிச்சயமான நடிகையாக வலம் வந்தார். மேலும் விஜய்யுடன் மெர்சல் படத்தில் ஜோடி சேர்ந்த நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து  தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக இருந்து வருகிறார். அதிலும் தனது  நடிகையின் மூலம் தமிழ் நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார். 

ஸ்ரீநிதி ஷெட்டி: மாடல் அழகியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. அதிலும் 2018 ஆம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து  2022 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் கிரஷ் ஆக  இருந்து வருகிறார்.

Also Read: நித்யா மேனனின் மொத்த சொத்தின் மதிப்பு.. 35 வயதில் பல கோடிகளை சேர்த்து வைத்திருக்கும் தாய்க்கிழவி

ராஷ்மிகா மந்தனா: கன்னடத்தில் வெளியான க்ரிக் பார்ட்டி என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமான நடிகையாக வலம் வந்தவர் தான் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தளபதியின் மேல் கிரஷ் ஆக இருந்து வந்த ராஷ்மிகா வெகுவிரைவிலேயே  விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடி சேர்ந்து தமிழ் நடிகைகளுக்கு ஆட்டம் காட்டினார்.

ஆஷிக்க ரங்கநாத்: சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளியான கிரேஸ் பாய் என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஆஷிகா ரங்கநாத். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் 2022 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதிலும் இப்படத்தில் பவித்ரா என்னும் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சிரத்தா ஸ்ரீநாத்: சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளியான கோஹினூர் எனும் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்படத்தை தொடங்கியவர் தான் நடிகை சிரத்தா ஸ்ரீநாத். அதனைத் தொடர்ந்து நிவின் பாலி நடிப்பில் வெளியான ரிச்சி படத்தில் தமிழில் அறிமுகமான இவர் காற்று வெளியிடை, இவன் தந்திரன் போன்ற படங்களில்  நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வந்தார். மேலும் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ஃபேவரட் நடிகையாகவே வலம் வந்தார். அதிலும் தனது நடிப்பின் மூலம் தமிழ் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

Also Read: ஓவரா யோசிச்சா உடம்புக்கு ஆகாது.. விஜய் தேவர்கொண்டா டேட்டிங் விவகாரத்தில் பதிலளித்த ராஷ்மிகா

- Advertisement -

Trending News