காசு பைத்தியம் பிடிச்சு அலையறாங்க.. நயன்தாரா லிஸ்டில் சேர்ந்த ரேசர் அஜித்

பொதுவாக சினிமா பிரபலங்களுக்கு ரசிகர்களால் ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், மற்றொரு பக்கம் பிரச்சனையும் இருக்கிறது. அதாவது அவர்கள் மற்றவர்கள் போல வெளியில் செல்ல முடியாது. காரணம் ரசிகர்கள் அவர்களை கண்டால் சூழ்ந்து கொள்வார்கள். இவ்வாறு அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரசிகர்கள் கருத்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

இப்படி இருக்கும் சூழலில் பிரபலங்களே தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்களுக்கு காண்பித்து காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பினால் ஓடிடி நிறுவனங்களும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு கோடிகளை வாரி குவித்து வருகிறது. இந்த விவகாரம் நயன்தாரா திருமண விஷயத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

Also Read : நயன்தாராவின் அடுத்த 5 பிரம்மாண்ட படங்கள்.. ரெட்டை குழந்தைக்கு தாயாகியும் மார்க்கெட் குறையல

அதாவது சினிமாவில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே நயன்தாரா திருமணத்திற்கு அனுமதி கொடுத்திருந்தார்கள். அங்கு மொபைல் போன் போன்ற சாதனங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. ஏனென்றால் நயன்தாராவின் திருமண வீடியோவை பல கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் வாங்கி இருந்தது.

இவ்வாறு நயன்தாரா திருமணத்தையே வியாபாரம் ஆக்கிய நிலையில் இப்போது ரேசர் அஜித்தும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார். அதாவது அஜித் ஒரு படத்தை முடித்துவிட்டு டூர் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார். இப்போது ஏகே 62 படத்தை முடித்த கையோடு வேர்ல்ட் டூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

Also Read : திரிஷா இல்லைனா நயன்தாரா.. அடுத்த கதாநாயகியை லாக் செய்த மணிரத்தினம்

ஆகையால் அஜித் வேர்ல்ட் டூர் செல்லும் வீடியோவை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாம். சாதாரணமாக அஜித்தின் ஒரு புகைப்படம் வெளியானாலே இணையத்தில் படு பயங்கரமாக டிரெண்டாகும். இதனால் தான் பல கோடிகள் ஒப்பந்தத்தில் அஜித்தின் வேர்ல்ட் டூரை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ரசிகர்கள் ஈடுபடுவதை விரும்புவதில்லை. மேலும் தன்னுடைய படத்தை ரசிகர்கள் பார்த்தால் போதும் தேவையில்லாமல் அதில் நேரத்தை செலவிட வேண்டாம் என்பதுதான் அஜித்தின் நிலைப்பாடு. அப்படி இருக்கையில் நெட்பிளிக்ஸிடம் தனது வேர்ல்ட் டூரை எப்படி விற்றார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read : அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் இணையும் தளபதி.. கனவு படத்திற்காக விஜய்க்கு போட்ட கொக்கி

Next Story

- Advertisement -