சிங்கம் எறங்கினா காட்டுக்கே விருந்து, குலசாமிய வேண்டிக்க நீ.. வெறித்தனமாக வந்த லியோ செகண்ட் சிங்கிள்

Leo Second Single: விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த லியோ செகண்ட் சிங்கிள் தற்போது ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. நேற்று முதலே ஆடியோ லான்ச் இல்லை என்ற வருத்தத்தில் இருந்த அனைவருக்கும் இது சரியான ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் அனிருத்தின் ஆக்ரோஷமான குரலில் படாசும்மா என சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த பாடல். சிங்கம் இறங்கினா காட்டுக்கே விருந்து என ஆரம்பித்து ஒவ்வொரு வரியும் வெறித்தனமாக இருக்கிறது.

Also read: விஷ பூச்சிகள் வேலையால் திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ ஆடியோ லான்ச்.. அதிர்ச்சியான உண்மை காரணம்

அதிலும் பெரும் புள்ளிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி எழுதி குடல் உருவும் சம்பவம் உறுதி. நூறு பஞ்சாயத்தை தீர்த்தாச்சிடா வரலாறு மொத்தம் பிளட் ஆச்சுடா என பாடல் மொத்தமும் தீப்பொறியாக இருக்கிறது. இதுவே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டியுள்ளது.

அது மட்டுமல்லாமல் தலைவர் அலப்பறை பாடல் வெளிவந்த போது ஒட்டு மொத்த துறைலகமும் அதிர்ந்து போய் பார்த்தது. அதே அளவுக்கு ஒரு பரபரப்பை தான் இந்த செகண்ட் சிங்கிள் பாடலும் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் லியோ பதிலடி கொடுத்து விட்டார் எனவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கின்றனர்.

Also read: ரெட் ஜெயண்டுக்கு தர மறுத்த விஜய்.. நேரம் பார்த்து செக் வைத்த உதயநிதி, முன்கூட்டியே கணித்த சவுக்கு சங்கர்

அந்த வகையில் புல்லரிக்க வைக்கும் வகையில் இருக்கும் பின்னணி இசையும், பாடல் வரிகளும் தரமான சம்பவத்திற்கு லியோ தயார் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. இதற்கே இப்படி என்றால் அடுத்த வாரம் வர இருக்கும் ட்ரெய்லர் எந்த அளவுக்கு ஆவலை தூண்டும் என்பது இப்போதே தெரிகிறது.