ரஜினிகாந்த் பட வாய்ப்பை தவறவிட்ட லியோனி.. இதெல்லாம் ஒரு காரணமா.?

தமிழில் தன்னுடைய இனிமையான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் திண்டுக்கல் லியோனி. இவர் நடிகர், மேடைப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என்ற பல முகங்களை கொண்டவர்.

கலைமாமணி விருதினை பெற்ற இவர் தமிழில் கங்கா கௌரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அருண் விஜய் ,வடிவேலு இவர்களுக்கு அப்பாவாக லியோனி நடித்திருந்தார். அந்தப் படம் வெளியான புதிதில் படத்தைப் பார்க்க லியோனி தியேட்டருக்கு சென்றுள்ளார்.

அப்போது ரசிகர்கள் அனைவரும் லியோனிக்கு ஏன் இந்த வேலை என்றும் இப்படி நடிப்பதற்கு பதில் பிச்சை எடுக்கலாம் என்றும் அவர் காதுபட கூறியுள்ளனர். இதனால் வேதனை அடைந்த லியோனி அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

சில நாட்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் ரஜினியின் மாமனாராக நடிக்கும் கதாபாத்திரம் இவருக்கு முதலில் தரப்பட்டது. அப்பொழுது பள்ளியில் வேலை பார்த்து வந்த இவருக்கு விடுமுறை கிடைக்காத காரணத்தினால் அந்த பட வாய்ப்பை தவர விட்டுள்ளார். இதைப்பற்றி ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார்.

பிறகு அந்த வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளரான ராஜா அவர்களுக்கு சென்றது. அவருக்கு சிவாஜி படம் வெளியாகி மிகப்பெரிய புகழைத் தேடித் தந்தது. தற்போது லியோனி நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மிகவும் புகழ்பெற்ற அலாவுதீனும், அற்புத விளக்கும் என்ற கதையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அலாவுதீனாக நடிகர் வைபவ் மற்றும் பூதமாக முனீஸ்காந்த் நடித்துள்ளனர். இவர்களுடன் திண்டுக்கல் லியோனி, பார்வதி நாயர், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் திண்டுக்கல் லியோனி, தேவயானியின் மாமனாராக நடித்திருந்தார். சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு விலகிய லியோனி தற்போது இந்த திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

sivaji-movie
sivaji-movie