வில்லத்தனத்தின் மொத்த உருவமான ஆண்டனி தாஸ்.. மிரட்டல் வீடியோவை வெளியிட்ட லியோ டீம்

Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் இருந்து அவ்வப்போது புதுப்புது அப்டேட் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள், போஸ்டர் என வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் தற்போது லியோ டீம் மிரட்டலான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது அவருக்கான வாழ்த்தாக வீடியோவை வெளியிட்டுள்ள பட குழு ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

Also read: விஜய்யை தாக்கி பேசிய ஒட்டு மொத்த கூட்டம்.. அவர் இல்லனா ஜெயிலர் படமே இல்லை என சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

அந்த வகையில் இப்படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் வரும் சஞ்சய் தத்தின் தோற்றமே அவருடைய வில்லத்தனத்தை காட்டுகிறது. வீடியோவின் ஆரம்பத்திலேயே ஒரு பெரிய பருந்து காட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து மிரட்டல் பார்வையில், சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் இருக்கும் ஆண்டனியின் அறிமுகம் புல்லரிக்க வைக்கிறது.

இவ்வாறாக வெளியாகி உள்ள இந்த வீடியோவில் சஞ்சய் தத் கடைசியாக ஒருவரிடம் ஃபோன் பேசும் படி முடிந்திருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோலக்ஸ் லைனில் இருக்கிறாரா என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஏனென்றால் இப்படம் லோகேஷ் யுனிவர்ஸ் பாணியில் தான் எடுக்கப்பட்டு வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.

Also read: யாரு சொன்னா விஜய்ய தப்பா பேசினாருன்னு.. தூக்கி விட்டு அழகு பார்த்த ரஜினி, இவர் கூடவா போட்டி?

அதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை என்றாலும் ரசிகர்கள் இதில் ரோலக்ஸ் கதாபாத்திரம் நிச்சயம் இடம்பெறும் என நம்பிக்கையுடன் காத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த ஆண்டனி தாசின் மிரட்டல் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. மேலும் ரிலீசுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பல சர்ப்ரைஸ் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்