யாரு சொன்னா விஜய்ய தப்பா பேசினாருன்னு.. தூக்கி விட்டு அழகு பார்த்த ரஜினி, இவர் கூடவா போட்டி?

Rajinikanth – Vijay: ஜெயிலர் படத்தின் இசையை வெளியீட்டு விழா நேற்று நடந்ததிலிருந்து ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்கள் பற்றி எறிய தொடங்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ரஜினி இதை பேசினார், அவரைப் பற்றி பேசினார், இந்த பதிலை இவருக்குத்தான் சொன்னார் என ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லுவது ரஜினி மற்றும் விஜய் இடையே கொளுத்தி போட்டு ரசிப்பதற்காக தான் என்று நன்றாகவே தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் அவரவர் ரசிகர்களும், சில பிரபலங்களும் தான் ஆளாளுக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் தன் மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல், கள்ளம் கபடம் இல்லாமல் பேசி இருப்பது தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது. அவருடைய பேச்சின் மூலம் தன்னை ஒரு ஆன்மீக ஞானி என நிரூபித்திருக்கிறார்.

Also Read:சன் டிவி வெளியிடும் ஜெயிலர் பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? ஜெட் வேகத்தில் எகிற போகும் டிஆர்பி

ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பே எனக்கு இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என சொல்லிவிட்டேன், இந்த பட்டம் என்பது எப்போதுமே தொந்தரவு தான் என ரஜினி பேசி இருப்பது, நான் யாருக்கும் போட்டியும் இல்லை, எனக்கு எதன் மீதும் ஆசையும் இல்லை என்று எல்லோருக்கும் புரியும்படி அவர் தெளிவாக சொல்லி இருப்பதையே காட்டுகிறது.

மேலும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என எழுந்து வரும் பேச்சுகளால் ரஜினி கோபமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரோ ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் கூட விஜயை விட்டுக் கொடுக்காமல் தான் பேசியிருந்தார். பீஸ்ட் திரைப்படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் விநியோகஸ்தர்கள் நெல்சனை வேண்டவே வேண்டாம் என தன்னிடம் வற்புறுத்தியதாக சொல்லி இருக்கிறார் ரஜினி.

Also Read:72 வயதிலும் வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்.. ஜெயிலர் மேடையில் விஜய்யை சீண்டிப்பார்க்கும் கலாநிதி மாறன்

மேலும் பீஸ்ட் திரைப்படம் வியாபார ரீதியாக தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை தான் கொடுத்திருக்கிறது. இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் இந்த படத்தை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். விமர்சன ரீதியாக தான் இதை பிளாப் என்று சொல்கிறார்கள் என அந்த இடத்தில் ரஜினி, விஜய்யை விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார். அவர் நினைத்திருந்தால் பீஸ்டுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது என்பதோடு முடித்திருக்கலாம்.

ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். அவருடைய அனுபவம், பெருந்தன்மையான குணம், எளிமை எப்போதுமே அனைவராலும் வியப்போடு பார்க்கப்படும் ஒன்று. தன்னைப் போட்டியாக நினைக்கும் ஒருவரை கூட உயர்த்திப் பேச முடியும் என்றால் அது ரஜினியால் தான் முடியும். அப்படி இருக்கும் போது அவரை இன்னும் போட்டி என நினைப்பது மற்ற நடிகர்களுக்கு தான் நஷ்டம்.

Also Read:நீங்க ரொம்ப கருப்பு, ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை.. பின் கண்டிஷன் போட்டு நடித்த ஒரே படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்