திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஓடனும், ஒளியனும் பயந்து பயந்து சாகனும், வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர்

Leo Trailer: லியோ ரிலீஸுக்காக மாதக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் இப்போது ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். விஜய், லோகேஷ் கூட்டணியில் படு மாஸாக உருவாகி இருக்கும் இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பே வெளியானது.

ஆனால் டைம் என்ன என்பதை மட்டும் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கவில்லை. இதனாலயே வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் லியோ ட்ரெய்லர் தற்போது ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது.

Also read: அவ்வளவு சம்பளம்லாம் கொடுக்க முடியாது.. விஜய்யும், சன் பிக்சரும் சேர்ந்து செய்த பெரிய துரோகம்

அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பமே விஜய்யின் குரலில் கதை சொல்வது போல் தொடங்குகிறது. அதை தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் வன்முறையும், சீரியல் கில்லர் அர்ஜுனின் வெறித்தனமான ஆட்டமும், சஞ்சய் தத்தின் வில்லத்தனம் என ஒவ்வொன்றும் ஆக்ரோஷ தாண்டவமாக இருக்கிறது.

அவர்களை எதிர்த்து நிற்கும் விஜய், அவருடைய மனைவி த்ரிஷா மற்றும் குழந்தை, போலீஸ் ஆபீஸர் கௌதம் மேனன் என முக்கிய கேரக்டர்களும் மிரள வைக்கிறது. அதன்படி இரண்டு விஜய் என்று பலரும் யூகித்தது போல் டைலரிலேயே ஹின்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: போடு வெடிய, ஒரு நாளுக்கு முன்பே வெளியாகும் லியோ.. முத்துவேல் பாண்டியன் வசூலை உடைக்க போறது உறுதி

அந்த வகையில் லியோ, பார்த்திபன் என்ற இரு கதாபாத்திரங்களில் மிரட்டும் விஜய்யின் ருத்ரதாண்டவம் வீடியோ முழுவதும் தெறிக்கிறது. இப்படியாக அனல் பறக்க வெளிவந்துள்ள லியோ ட்ரெய்லர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

- Advertisement -

Trending News