விக்ரம், வாரிசை ஓரம் கட்டிய லியோ.. வெளிநாட்டு உரிமை எத்தனை கோடி தெரியுமா?

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு ஆன ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கப் போகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்திற்கு வட இந்தியாவிலும் அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது எப்படி தெரிய வந்தது என்றால், தியேட்டர்களில் இடைவெளியின் போது லியோ படத்தின் ப்ரோமோ வீடியோவை திரையிடுகின்றனர். அப்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கத்தி கூச்சலிடுகின்றனர். அதேபோல் தான் வெளிநாடுகளிலும் லியோ படத்தை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: விஜய்யை விட அஜித்துக்கு ஜோடியாக நடித்ததால் வந்த புகழ்.. வீட்டிற்கு அதே பெயரை வைத்து அழகு பார்த்த நடிகை

தற்போது லியோ படத்தின் வெளிநாட்டின் உரிமையை எத்தனை கோடியைக் கொட்டி கொடுத்து வாங்கி இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் வெறும் 35 கோடிகள் தான் வெளிநாட்டு உரிமைக்காக பெற்றது.

ஆனால் லியோ படத்தின் வெளிநாட்டு உரிமை கிட்டத்தட்ட 60 கோடி வியாபாரம் பார்த்திருக்கிறது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான். இப்படி இருக்கும்போது விஜய்க்கு 200 கோடிகள் கொடுக்கலாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் தாராளம் காட்டுகிறது.

Also Read: அத்தைக்கு லிப் லாக் கொடுத்து வாந்தி வர வைத்த விக்ரம்.. இது என்னடா மோசமான உருட்டா இருக்கே!

மொத்தத்தில் லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 450 கோடிகள் வரை பிசினஸ் ஆகி உள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படத்தின் பிரீ பிசினஸ் 300 கோடி தான். ஆனால் அதைவிட 150 கோடி அதிகமாக லியோ பார்த்திருப்பது பலரையும் பொறாமை பட வைக்கிறது.

அது மட்டுமல்ல இந்த படம் விக்ரம் படத்தை ஓரம் கட்டி விடும் போல தெரிகிறது. ரிலீசுக்கு பின் வசூலிலும் விக்ரம் படத்தை முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விக்ரம் படத்தின் ஃப்ரீ பிசினஸ் 200 கோடி தான். ஆனால் லியோ படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத போதே 450 கோடி பிசினஸ் ஆனது கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: அப்ப ஹீரோ இப்போ கேரக்டர் ஆர்டிஸ்ட்.. மவுசு குறையாத 5 சீனியர் நடிகர்களின் சம்பளம், முதலிடத்தில் விஜய்யின் அப்பா

Next Story

- Advertisement -