லியோ vs ஜெயிலர், ஜெயித்தது யார்.? புள்ளி விவரத்தோடு வெட்ட வெளிச்சமாக்கிய பிஸ்மி

Leo Movie True Collection Report: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. முந்தைய வருடங்களை காட்டிலும் விஜய் நடித்த இந்த படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வருவதற்கு முன்பே அதன் வசூல் விபரங்கள் என நிறைய புள்ளி விவரங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகின.

விஜய் ரசிகர்களை பொறுத்த வரைக்கும் லியோ படத்தின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை தாண்டி விட வேண்டும் என்பதில் தான் குறிக்கோளாக இருந்தார்கள். ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் அந்த படத்திற்கு அதிகமாக ஹைப் ஏற்றுக் கொண்டிருந்த நேரத்தில், சோசியல் மீடியாவில் லியோ படம் மொக்கை எனவும் தகவல்கள் காட்டு தீயாய் பரவியது.

நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களை தாண்டி லியோ படம் எவ்வளவு தான் வசூலித்தது என்பதில் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய கேள்வி இருந்தது. அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக வலைப்பேச்சு யூடியூப் தளத்தில் பிஸ்மி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் சொல்லி இருக்கும் புள்ளி விவரங்களை பார்க்கலாம்.

Also Read:மீ டூ சர்ச்சையில் சிக்கிய 4 லியோ பிரபலங்கள்.. என்ன லோகி இதெல்லாம்

லியோ படம் வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. தீபாவளிக்கு ரிலீசான படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால், லியோ படத்திற்கு இது சாதகமாக அமைந்திருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்த இந்த படத்தின் மொத்த பரிட்சை 300 கோடி எனவும், வட்டியோடு சேர்த்து செலவு 335 கோடி இருக்கும் என பிஸ்மி சொல்லி இருக்கிறார்.

லியோ படத்தின் மொத்த பிசினஸும் சேர்த்து கையில் வந்தது 434 கோடியாகும். பட்ஜெட்டை வைத்து பார்த்தால் இதில் 99 கோடி தயாரிப்பாளருக்கு லாபமாக கிடைத்திருக்கிறது. இந்த 434 கோடியில் தியேட்டர் பிசினஸ் 202, தியேட்டர் பிசினஸை தாண்டிய வியாபாரம் 232 கோடியாகும். ரிலீஸ் ஆகி 30 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் லியோ படம் 205 கோடி வசூலித்திருக்கிறது.

மொத்த லியோ படம் இந்திய அளவில் 386. 5 கோடி வசூலித்திருக்கிறது. உலக அளவிலான வியாபாரத்தில் 201 கோடி வசூலித்திருக்கிறது. 335 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் இதுவரை 587.5 கோடி வசூலித்திருப்பதாக பிஸ்மி சொல்லி இருக்கிறார். மொத்தத்தில் லியோ இதுவரை 600 கோடியை தொடவில்லை இதனால் ரஜினியின் ஜெயிலர் படம் தான் முதலிடத்தில் இப்போதைக்கு இருக்கிறது.

Also Read:த்ரிஷாவை வைத்து கேவலமாக பேசிய மன்சூர் அலிகான்.. லோகேஷ் போட்ட பதிவால் ஆடி போன கோலிவுட்