மீ டூ சர்ச்சையில் சிக்கிய 4 லியோ பிரபலங்கள்.. என்ன லோகி இதெல்லாம்

Leo-Lokesh: இப்போது சோசியல் மீடியாவில் மன்சூர் அலிகான் பற்றிய சர்ச்சை தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்திருந்தார்.

ஆனால் இவரை ஏன் நடிக்க வைத்தோம் என்று லோகேஷ் நொந்து போகும் அளவுக்கு ஒரு பிரச்சனை இப்போது வைரலாகி வருகிறது. அதாவது மன்சூர் அலிகான், திரிஷா பற்றி முகம் சுழிக்க வைக்கும் ஒரு கருத்தை சொல்லி இருந்தார். அதற்கு தற்போது திரை பிரபலங்கள் பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய குணம் தெரிந்தும் லோகேஷ் எதற்காக இவரை லியோவில் நடிக்க வைத்தார் என்றும் கேட்கப்பட்டு வருகிறது. ஆனால் லியோவில் இன்னும் மூன்று மீ டூ சர்ச்சையை சந்தித்த பிரபலங்களும் இருக்கின்றனர். அதன்படி ஆக்சன் கிங் அர்ஜுன் மீது இப்படி ஒரு புகார் வைக்கப்பட்டிருந்தது.

Also read: த்ரிஷாவை வைத்து கேவலமாக பேசிய மன்சூர் அலிகான்.. லோகேஷ் போட்ட பதிவால் ஆடி போன கோலிவுட்

அவரின் நிபுணன் படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்ததோடு அர்ஜுன் மீது புகார் கொடுத்திருந்தார். அதையடுத்து நடந்த விசாரணையில் போதிய ஆதாரம் இல்லை என அர்ஜுன் விடுவிக்கப்பட்டார். ஆனால் இதற்கு முன்பாகவே இந்த குற்றச்சாட்டை மறுத்த அர்ஜுன் சம்பந்தப்பட்டவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக லியோவில் சிறு கேரக்டரில் நடித்திருந்த பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யப் மீதும் இப்படி ஒரு புகார் எழுந்தது. நடிகை பாயல் கோஷ் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்து அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அனுராக் இதை திட்டவட்டமாக மறுத்தார். அதே போன்று விக்ரம் படத்தில் நடித்து தற்போது பிக்பாஸில் கலக்கிக் கொண்டிருக்கும் மாயா மீதும் இந்த புகார் எழுந்தது.

நடிகை அனன்யா இப்படி ஒரு குற்றச்சாட்டை சோசியல் மீடியா முன் வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து சுசித்ரா உள்ளிட்ட சில பிரபலங்களும் மாயா பற்றிய பகீர் தகவல்களை அம்பலப்படுத்தினர். இந்த வரிசையில் தற்போது மன்சூர் அலிகான் இணைந்துள்ளார். இதற்கு முன்பாகவே இவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்கு நடந்தது. இப்படியாக நான்கு மீ டூ சர்ச்சை பிரபலங்களை லோகேஷ் தன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

Also read: கொம்பு சீவி விட்ருக்காங்க, உங்க பருப்பு எண்ட வேகாது.. த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு மன்சூர் பதில்