பதற வைத்த நிலநடுக்கம், லியோ டீம் எப்படி இருக்கு? தயாரிப்பாளர் போட்ட ட்வீட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருப்பதால் பட குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். விரைவில் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த கட்ட பணிகளை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் வட மாநிலங்களில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் இந்த நிலநடுக்கத்தால் பீதி அடைந்துள்ளனர். 49 நொடியிலிருந்து 1 நிமிடம் வரை இந்த நில அதிர்வு மக்களால் உணரப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து பலரும் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

Also read: இப்பவே தோல்வி பயத்தை காட்டும் கமல்.. பதட்டத்துடன் இருக்கும் லியோ படக்குழு

அதேபோன்று லியோ பட குழு தங்கி இருந்த ஹோட்டல் அறையிலும் இந்த நிலநடுக்கம் ஒரு பீதியை கிளப்பி இருக்கிறது. முதலில் பலத்த காற்று வீசுவது தான் இவ்வளவு அதிர்வை உண்டாக்கி இருக்கிறது என அனைவரும் நினைத்திருக்கின்றனர். அதன் பிறகு தான் இது நிலநடுக்கம் என்று அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதனால் பதறிப்போன அனைவரும் விரைந்து ஹோட்டல் அறையிலிருந்து கீழ்தளத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் ரசிகர்களும் தளபதிக்கு என்ன ஆச்சு என்றும் படக்குழுவினர் எப்படி இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also read: லோகேஷுக்கு வலை விரித்து இருக்கும் 3 ஸ்டார்கள்.. 50 கோடியுடன் காத்திருக்கும் பாலிவுட் நடிகர்

அதற்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் அனைவரும் நலமுடன் இருப்பதாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். ஏற்கனவே காஷ்மீர் குளிரால் பட குழு மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இருந்தாலும் கஷ்டப்பட்டு சூட்டிங்கை லோகேஷ் நடத்தி வந்தார். மேலும் லியோ டீம் இன்னும் சில வாரங்களில் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்ப திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த நிலநடுக்கம் அனைவரையும் கொஞ்சம் பதற தான் வைத்துள்ளது. இருப்பினும் தற்போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பது ரசிகர்களை ஆறுதல் அடைய வைத்துள்ளது. அந்த வகையில் மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பிய நிலையில் தற்போது விஜய், திரிஷா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மட்டும் காஷ்மீரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: விஜய், அஜித் இல்லாத சிறந்த 10 நடிகர்களின் லிஸ்ட்.. வசூல் பண்ணா மட்டும் பத்தாது, பெர்பார்மன்ஸ் இல்ல

Next Story

- Advertisement -