Leo FDFS: லியோ படத்தின் டிரைலர் வெளியாகிய குஷியோடு நேற்று விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வெளியான தகவல்தான் அந்தப் படத்தை ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் என ஒளி பரப்பலாம் என்று வந்த அறிவிப்பு லியோ படம் அதிகாலை காட்சி இருக்குமா என சந்தேகித்த சினிமா ரசிகர்களுக்கு இந்த விஷயம் ஒரு ட்ரீட்டாக அமைந்துவிட்டது.
கடந்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படத்தின் நள்ளிரவு காட்சியின் போது அஜித் ரசிகர் ஒருவருக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு இறந்து விட்டதால் அதன் பிறகு இது போன்ற நள்ளிரவு காட்சிகளே வேண்டாம் என உத்தரவு பிறப்பித்திறந்தது மாநில அரசு. சமீபத்தில் வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்கள் எதற்குமே நள்ளிரவு காட்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை.
அதேபோன்றுதான் லியோ படமும் காலை ஒன்பது மணிக்கு தான் முதல் காட்சியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மத்திய அரசுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தது. மத்திய அரசு அனுமதியும் வழங்கி விட்டது.
இந்த உத்தரவில் என்ன சிக்கல் என்றால் அனுமதி கடிதம் வழங்கிய மத்திய அரசு ஐந்து காட்சிகளுக்கு அனுமதி என பொதுப்படையாக தெரிவித்துவிட்டது. இந்த காட்சி அதிகாலை 4 மணிக்கு ஆரம்பிக்கலாமா அல்லது 7 மணியா, 8 மணியா, என சரியாக குறிப்பிடாததால் இப்போது பெரிய குழப்பத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திற்கு கூட அதிகாலை காட்சிக்கு ஓகே சொல்லாத நிலையில் விஜய் நடித்த லியோ படத்திற்கு மட்டும் தலை அசைத்து இருப்பது முக்கிய கட்சியிடம் இருந்து வந்த அழுத்தம் தான் என சொல்லப்படுகிறது. விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்க இருக்கிறார் என இப்போது செய்திகள் வெளியாகி வருகிறது.
விஜய் அரசியலில் இறங்கினால் அவர் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என நினைத்து பிஜேபி கட்சி தான் இப்போது விஜய் படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பது போல் சொல்லப்படுகிறது. லியோ படத்தில் முதல் நாள் முதல் காட்சி சரியாக எத்தனை மணிக்கு ஆரம்பம் ஆகும் என விரைவில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.